Saturday, 1 January 2011

ஆலனும், நானும்! (Happy New Year 2011)

அப்பா, அம்மா, ஆலன் & ரோஷினி.


Daddy, நானும் உங்க கூட காய்கறி வாங்க வர்றேன்.

நான் சைதாபேட்டை மார்க்கெட் வரைக்கும் நடந்தே போறேன். ரெண்டு பை தூக்கனுன்டா, உன்னைய வேற கவனிக்கிறது கஷ்டம், நீ வேற திடீர்னு "நடக்க முடியல, தூக்கு"-ன்னா, என்னால முடியாது. 

நான் பச்சை மனிதன் மாதிரி செம ஸ்ட்ராங்கு. நான் உங்கள தூக்கல்லாம் சொல்ல மாட்டேன். நடந்தே வந்திருவேன், நானே ரெண்டு பையும் தூக்கிட்டு வந்திருவேன்.

Hulk-ஆ? அவன் என்ன பண்ணுவான்?

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. (இரண்டு கைகளையும் மார்பில் அடித்துக் கொள்கிறான்)

சரி போதும், எலும்பு ஒடஞ்சிரப் போகுது. மழை வரும் போலருக்கு, நனைஞ்சா சளி புடிக்கும், காய்ச்சல் வரும், நீ பேசாம வீட்டில இரு.

நான் raincoat போட்டுக்குவேன். அத போட்டா கொஞ்சம் கூட நனைய மாட்டேன்.

அங்கெல்லாம் ஒரே சகதியா இருக்கும், காலெல்லாம் சேறாய்டுன்டா.

அதுக்கு தான் அதோட rain shoes இருக்குல்ல?

(எந்தப் பக்கம் போனாலும் அணை கட்டுறான்?) செல்லம், இவனைக் கொஞ்சம் திசை திருப்புறியா? நான் கெளம்பனும்.


==========================================================================================

ஒரு நாள் தூங்கப் போகும் போது, கண்கள் இரண்டையும் திறந்து பார்த்தான் ஆலன்.

நீங்க என்ன கண் டாக்டரா?

ஆமா


திருச்சில ஒரு கண் டாக்டர் எனக்கு .25 power இருக்குன்னு சொன்னாரு. கண்ணாடி போடணுமா டாக்டர்? இல்லன்னா நீங்க கண்ணாடி போட வைக்காமலே சரி பண்ணிடுவீங்களா?

"உம்ம்ம்ம், கொஞ்சம் கண்ணை மூடுங்க"-ன்னு சொல்லிட்டு ரெண்டு கண்ணிலேயும் முத்தம் கொடுத்தான். "அப்படியே 5 minutes இருங்க, சரியாகிடும்"

ஓகே, டாக்டர்.

அஞ்சு நிமிஷம் ஆகிடுச்சு, கண்ண தொறக்கலாம்.

பீஸ் எவ்வளவு டாக்டர்? 100 rupees-ஆ?

1000 rupees, எனக்கு thousand தான் புடிக்கும்.

(எச்சில் வடியக் கொடுத்த இரண்டு முத்தங்களுக்கு எவ்வளவு வேணும்னா கொடுக்கலாம்) சரி, இந்தாங்கதேங்க்ஸ் டாக்டர், நான் வர்றேன்.


ஹலோ... இருங்க, காசு கொடுத்திருக்கீங்கல்ல, மாத்திரயும் வாங்கிட்டுப் போங்க.

நீங்க ரொம்ப நல்லவரு, டாக்டர்.



==========================================================================================

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 2011 சிறப்பான ஆண்டாக அமையட்டும்!

3 comments:

sivatharisan said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

Joe said...

நன்றி சிவதரிசன்.

நன்றி ராகவன் அண்ணா!
உங்கள் இருவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். (நான் சொல்றதுக்குள்ள தமிழ்ப் புத்தாண்டே பொறந்திருச்சு ;-) )