Monday, 29 November 2010

நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?

ஏதோவொரு சமயம் ஆலன் குட்டிக்கு அம்மா சின்ன உதவி செய்ய, அவன் "Thank You " என்று சொன்னான்.

அவனது அம்மா பதிலேதும் சொல்லாமல் வேறு ஏதோ வேலையில் மும்மரமாக இருந்தாள்.

"Thank You" சொன்னா, நீங்க "Welcome" சொல்லணும் தெரியாதா?

"ஆமாண்டா, இந்தம்மாவுக்கு ஒண்ணுமே தெரியல, நீ உங்க ஸ்கூல்-ல சேத்து 
விட்டு, சொல்லிக் கொடு."-ன்னு உசுப்பேத்தி விட்டேன்.

அம்மா, நான் உங்க வயித்தில கைய விட்டு, சாப்பாடெல்லாம் எடுத்திருவேன். அப்புறமா நீங்க "small girl" மாதிரி ஆயிடுவீங்க, உங்களுக்கு small girl போடுற "shirt", "skirt" எல்லாம் போட்டு விட்டு எங்க ஸ்கூல்-ல LKG-ல சேத்து விட்டுறேன். சரியா?

ஹா ஹா ஹா!

==================================================================================

சில நாட்களுக்கு முன்பு ஆலன் அருகில் அவனது அம்மா படுக்கவும், அவனது போர்வையை எடுத்து "நீங்களும் போத்திக்கோங்க" என்று சொல்லியிருக்கிறான்.

"எனக்கு வேண்டாம், நான் அப்புறமா வேற போர்வை எடுத்து போத்திக்கிறேன்" என்று அவள் சொல்லவும், அவன் சொன்ன பதில் "எப்பவுமே எல்லாத்தையும் share பண்ணிக்கணும்மா, என் கூட share பண்ணிக்கணும், அப்பா கூட share பண்ணிக்கணும். அப்புறம் குட்டிப் பாப்பா வந்தப்புறம், நான் அவ கூட share பண்ணிக்குவேன். எங்க ரெண்டு பேருக்கும் குட்டி கட்டில் வாங்கிடுங்க, நாங்க அங்க படுத்துக்குவோம், நான் பாப்பாவை நல்லா பாத்துக்குவேன்".

:-)

மைத்துனரின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்து, இவனுக்கும் தம்பியோ, தங்கையோ கூட இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகி விட்டது போல.

=================================================================================

ஆலன்: அம்மா

அம்மா: என்னடா?

ஆலன்: அம்மா, நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?

அம்மா: நான் ஏற்கனவே உங்கப்பாவை கல்யாணம் பண்ணிட்டேனே? நீ என் பிள்ளைடா, உன்னக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. உனக்கு 20 வருஷம் கழிச்சு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணி வைச்சிருவோம். சரியா?

ஆலன்: உங்க பேச்சு கா, இனிமே நான் உங்க கூட friend கிடையாது.

10 comments:

எஸ்.கே said...

nice!

அகமது சுபைர் said...

//இவனுக்கும் தம்பியோ, தங்கையோ கூட இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகி விட்டது போல.//

அவனுக்கு மட்டும் தானா?? ;))

கார்த்திகைப் பாண்டியன் said...

முதலும் மூணாவதும் ஆலன் ஸ்பெஷல்.. இரண்டாவதுல கொஞ்சம் புனைவும் அப்ளிகேஷனும் இருக்கோ.. என்சாய் தி ஆலன் டைம்ஸ் ஜோ..:-)))

Joe said...

நன்றி எஸ்.கே.

நன்றி சுபைர்.

நன்றி கார்த்திக். மூணுமே ஆலன் சொன்னது தான், புனைவில்லை. நமக்கு "நாமிருவர், நமக்கொருவர்" என்ற அரசாங்கக் கொள்கையே போதும் ;-)

Sriakila said...

Smart boy!

ஸ்ரீதர் நாராயணன் said...

//நான் பாப்பாவை நல்லா பாத்துக்குவேன்//

நல்ல பொறுப்பானவரா இருக்காரே ஆலன்... :))

So Cute!

சந்தோஷ் = Santhosh said...

Cho Cuteee..

//மைத்துனரின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்து, இவனுக்கும் தம்பியோ, தங்கையோ கூட இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகி விட்டது போல.//
நெஜமாலுமே இது ஆலன் சொன்னது தானா?

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்...

Joe said...

நன்றி ஸ்ரீ அகிலா.

நன்றி ஸ்ரீதர். (சில சமயம் அப்படி நடந்துக்குவார், ஹா ஹா)

நன்றி சந்தோஷ்.

நன்றி சுதா.

நன்றி ஞானசேகரன் (ம்ம்ம்ம் என்றால் என்ன அர்த்தம்?)