நேற்று மகனின் பள்ளியில் குழந்தைகள் தினக் கொண்டாட்டம். மைதானத்தினருகே செல்லவும் கேட்ட முதல் பாடல் Love the way you lie by Eminem feat Rihanna.
பிறகு "இறகைப் போலே"
Last Christmas by George Michael
Faith by George Michael
....
+2 மாணவர்கள் சில பேர் DJ வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நல்ல ரசனையுள்ள பசங்க!
மற்ற சிறுவர், சிறுமிகள் tattoo போட்டிருப்பதைப் பார்த்ததும், ஆலனும் அந்தக் கடைக்குப் போகலாம் என்றான். போகும் வழியில்
"டேய் ஜேகப்"
"டேய் ஆலன்"
"ஏய், மச்சான்"
"Tattoo போடப் போறேன், சொல்றா மாப்ளே"
"போயிட்டு வா, அப்புறம் பேசுறேன்"
முளைச்சு மூணு எல விடல அதுக்குள்ள காலேஜ் பசங்க மாதிரி பேசுறானுங்க!
பத்து நிமிடம் வரை வரிசையில் காத்திருந்து, இடது கையில் dragon tattoo வரைந்து கொண்டான்.
குழந்தைகளை மகிழ்விக்கும் கடைகள் வெகு சிலவே இருந்தன, பெரும்பாலானவை ஆசிரியர்களின் Entrepreneur skils-ஐ வளர்க்கவே என்று தோன்றியது.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் கோட்டூர்புரத்திலிருக்கும் அண்ணா நூலகத்திற்கு சென்றோம். இன்னும் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் பிரமித்துப் போனோம். அற்புதமான கட்டிட அமைப்பு, சுத்தம், வெளிநாட்டு நூலகத்தில் இருப்பது போலவே உணர்ந்தோம். (நம்மாளுங்க இதை சீரழிக்காம இருக்கணும்னா, பான் பராக் போடுரவங்களை எல்லாம் வெளிவாசலிலேயே வைச்சு தொரத்திடுங்க). நேரம் அதிகமில்லை என்பதால் குழந்தைகள் பகுதியில் மட்டும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு கிளம்பினோம். அடுத்த வாரம் உறுப்பினர் ஆகி விட வேண்டும்.
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

2 comments:
//முளைச்சு மூணு எல விடல அதுக்குள்ள காலேஜ் பசங்க மாதிரி பேசுறானுங்க!//
Cute.
Happy Children Day.
நன்றி அனாமிகா.
Post a Comment