Tuesday, 12 October 2010

எந்திரன் : The Robot

போன வாரம் வெள்ளிக்கிழமை அண்ணா நகர் பக்கம் போக வேண்டியிருந்தது. வரும் வழியில் Ampa Mall-ல கொஞ்ச நேரம் சுத்திட்டு போவோம்னு போனோம். படத்துக்கு போய் பல வாரங்கள் ஆச்சேன்னு மனைவி சொல்லவும், வெள்ளிக் கிழமை இரவு PVR-ல கண்டிப்பா கிடைக்காது, சும்மா கேட்டுப் பார்ப்போம்னு போனா, இரவுக் காட்சிக்கு மூன்று டிக்கெட்கள் மிக எளிதாக வாங்க முடிந்தது. 

200 கோடி செலவில் எடுக்கப்படும் பிரம்மாண்டமான படம்னு சொல்லிட்டு, 1930-லேருந்து எடுத்திட்டு வர்ற முக்கோணக் காதல் கதைய ரோபோ வைச்சு எடுத்து கொடுமை பண்ணிருக்காங்க.

ரோபோ ரௌடிகளிடமிருந்து கதாநாயகியை காப்பாத்துது. (நல்ல வேளையா அந்த சீன்-ல அதுக்கு ஒரு intro song போடாம விட்டாங்க), 30 பேருக்கு சமைக்கிறது, பிட் அடிக்க உதவுது, (தப்பு செய்றவங்களை கொலை பண்ணனும்னு சொன்ன சங்கர் படங்களை அந்த ரோபோ பாக்கல போல?), தீ விபத்தில சிக்கியவர்களை காப்பாத்துது  (ரோபோவின் சக்தி இல்லாமலே Spiderman, Superman பண்ற gimmicks எல்லாம் ரஜினி பண்ணுவாரே? அப்புறம் இதுக்கேன்யா 200  கோடி செலவு பண்ணி sci-fi படம்  பண்ணனும்?)

ராணுவத்துக்கு கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு அதுக்கு ஏன் நடனம், இசை சம்பந்தப்பட்ட விஷயங்களை ஏத்துராரு Dr. வசீகரன்? (இது தமிழ்ப் படம், கண்டிப்பா அஞ்சு பாட்டு இருக்கும், அதில ரெண்டுல ரோபோவ ஆட வைக்கனும்னு சாமான்யனுக்கே தெரியும், விஞ்ஞானிக்கு தெரியாதா?)

படத்தில வசீகரனுக்கு காபி கொடுக்கிற குட்டி ரோபோ கருணாஸ்-க்கு தண்ணீர் கூட கொடுக்க மறுக்கிறது. (இந்தியா-ல ரொம்ப கொடுமையான கம்பெனி-ல கூட ஊழியர்கள் எல்லோருக்கும், டேபிள்-ல வந்து டீ கொடுக்கிற பணியாளர்கள் உண்டு. AIRD என்கிற அருமையான விஞ்ஞானக் கூடத்தில grade கம்மியா இருந்தா தண்ணி கூட கிடையாது, என்கிற சங்கரின் சிந்தனை அடடா, அபாரம்!)

இதே போல ஜப்பான்-ல அசிமோ-ன்னு நிஜமாகவே ஒரு ரோபோ தனியே வாழும் முதியவர்களுக்கு உதவி செய்கிறது,  நல்ல வேளையா அதுக்கு இந்த மாதிரி பாகுபாடு பார்க்கத் தெரியாது. 

கவுண்டமணி இல்லாத குறையை தீர்த்து வைக்க ரோபோ கருணாசையும் சந்தானத்தையும் ஒதைக்குது, ஆனா சிரிப்பு வரல. Research fellows-ஐ இந்தளவுக்கு யாராலும் கேவலப்படுத்த முடியாது, சந்தானம் & கருணாஸ் மட்டமான தேர்வு.

2008-லேயே அலுவகங்களில் புகை பிடிக்க தடை விதித்து விட்டாரே மருத்துவர். அன்புமணி? அப்புறம் எப்படி Dr. Bora அவரோட லேப்-ல புகை பிடிக்கிறாரு? கருணாஸ், சந்தானம் ஆய்வுக்கூடத்திற்கு வெளியே புகை பிடிப்பதும் காட்சிப் பிழை. 2008-க்கு பிறகு அது போன்ற smoking zones கூட public & private organization campuses-ல கிடையாது. சாதாரண கம்பனிகள் கூட இப்போ காவலாளிகள் வைத்து சோதனை செய்த பிறகே ஊழியர்களைக் கூட உள்ளே அனுப்புகின்றன. AIRD chief-க்கு முன்னாடி அவரோட லேப்-லேயே தீவிரவாதிகள் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். (இது தமிழ்ப் படம், don't ask too many logical questions, bloody fool)

காதல் அணுக்கள், இரும்பிலே பாடல்களில் ஐஸ் ரொம்ப நல்லா ஆடியிருக்காங்க, ஆனா romance பண்ண வேண்டிய காதலர் எப்போவும் பத்தடி தள்ளியே இருக்காரு? பாடல்கள் நல்லா எடுத்திருந்தாலும் படத்தோட ஒட்டனும், அப்போ தான் பாக்க நல்லாருக்கும். கலாபவன் மணி மூஞ்சில மண்ணை வீசியதுக்கெல்லாம் ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு சடார்னு     மச்சு பிச்சுவுக்கு போய்டுறாங்க (Guess they have strong connections with travel agents) சொல்லப் போனால் ஒரு விஞ்ஞானப் படத்தில் பாடல்கள், நடனம் எல்லாம் திரைக்கதையின் ஓட்டத்துக்கு தடை, வைத்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. (பேசும் படம், குருதிப் புனல், அப் தக் சப்பன் (ஹிந்தி) போன்ற பல படங்கள் பாடல்களே இல்லையென்றாலும் ஓரளவுக்கு ஓடியதே?) 

ப்ளட் குரூப் என்னன்னு ஸ்கேன் பண்ணியே கண்டு பிடிக்கிற ரோபோ பொய் சொல்லும் கதாநாயகியின் கண்களை ஸ்கேன் பண்ணியே polygraph டெஸ்ட் செய்து கண்டு பிடிக்க முடியாதா? 1950-ல எடுத்த படங்களில் மரு, தாடியும் ஒட்டிக்கிட்டு ஹீரோவும், அரை நிர்வாணமா ஹீரோயினும் நடனம் ஆடினா வில்லனுக்கு அவுங்கள அடையாளம் தெரியாது. அதையே 2010-ல "நீ டான்ஸ் ஆடிட்டு இரு, நான் அந்த நேரத்தில ஏதாவது செய்றேன்"-ன்னு ஹீரோயின் கிட்ட ஹீரோ சொன்னா எப்படி? திருந்துங்கப்பா!

Dr. போரா சிட்டியை அழிவு சக்திக்கு பயன்படுத்த red chip மாட்டுறாராம், ஏன்னா சிவப்பு அபாயத்தின் அறிகுறியாம்லே? (அப்புறம் ஏன்டா இந்த நாட்டில பல அறிவு கெட்ட பதர்கள் red signal போட்டு ஐந்து வினாடிகளுக்கு அப்புறமும் உள்ளே பூந்து ஓடுதுங்க?) 

ஷங்கர் பத்து வருஷமா யோசிச்சு வைச்சிருந்த படம்னா, ஜேம்ஸ் கமேரூன் பத்து வருஷமா யோசிச்சு வைச்சிருந்த அவதார் அளவுக்கு வந்திருக்கணும். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் வந்த ET அளவுக்கு கூடயில்லையே?

நானொன்றும் AI / Robotics வல்லுனர் இல்லை எனினும், முரண்பாடாக சிந்திக்கும் ரோபோவின் தேவையற்ற modules எல்லாம் uninstall பண்ணுவேனே தவிர, கோடாரி எடுத்து வெட்ட மாட்டேன். (கண்ட துண்டமாக வெட்டி குப்பையில் போட்டாலும் அது தானே reintegrate செய்து கொள்ளும் என்பது மட்டும் விஞ்ஞானிக்கு தெரியாமல் போனது ஏனோ?)

60 வயசு ஆனப்புறமாவது எனக்கு intro song இல்லைன்னாலும் பரவாயில்ல-ன்னு ரஜினி சொன்னது தான் ஒரே நல்லா விஷயமாத் தோணுது. மத்தபடி, உண்மையிலேயே இந்த படத்துக்கு 200 கோடி செலவு செய்தார்களா என்று தான் கேட்கத் தோன்றுகிறது. The end product doesn't seem to be worth 200 crores budget and it wasn't worth spending Rs.360 (3 tickets for my family) on this movie.

ரஜினி, ஷங்கர் படம்னா தியேட்டர்ல முதல் நாளோ, முதல் வாரத்திலேயோ பாத்திரனும்னு ஒரு கும்பல் இருக்கிற வரைக்கும் பண முதலைகள் தமிழ் சினிமாவை குப்பைக் கூளமாகவே தான் வைத்திருக்கும். இதனால் தான் தமிழகம் முழுதும் 90% திரையரங்குகளில் எந்திரன் மட்டுமே வெளியிடுமாறு ஏகாதிபத்தியம் செய்து முதல் வாரத்திலேயே 300 கோடிக்கு மேல் லாபம் பார்த்திருக்கிறது ஒரு ஊடக மாபியா கும்பல்.

மசாலாப் படங்களையே யாரும் பார்க்க கூடாது என்று சொல்ல முடியாது. (அப்படி சொன்னாலும் யாரும் கேட்கப் போறதில்ல) இந்தியன், அந்நியன் எல்லாம் கூட மசாலாப் படங்கள் தானே, எனினும் அந்தப் படங்களில் ஒரு நேர்த்தியிருந்தது, சமூகக் கோபமிருந்தது. (அவை அளிக்கும் தீர்வுகள் பாசிசத் தன்மை கொண்டவை எனினும், சாமான்யர்கள் செய்ய விரும்புவது அது தான்). ராமநாராயணன் எடுக்கும் குட்டிப் பிசாசு போல கிராபிக்ஸ் செய்து விட்டு, நாங்கள் ஹாலிவுட் தரத்திற்கு எடுத்திருக்கிறோம் என்று ஏன் பொய் விளம்பரம் செய்கிறீர்கள்?

Better luck next time, Shankar!

11 comments:

தாரணி பிரியா said...

பத்து வருசமா யோசிச்ச கதை இல்லைங்க. பத்து வருசத்துக்கு முன்ன யோசிச்ச கதை :). அப்படியே அங்கயே ஸ்டாப் ஆகிடுச்சு

Pradeep said...

Super joe......totally waste film

என் பக்கம் said...

super joe

ம.தி.சுதா said...

நன்கு ரசிக்கக் கூடிய பதிவாக இருந்தது வாழ்த்துக்கள்... தாங்கள் சொல்வது போல் கதையமைப்பில் சில நெருடல்கள் இருந்தாலும்.. காட்சியமைப்பப் பற்றி விரைவில் கொலிவட்டில் பேசப்படும் அப்போது நான் இப்பதிவிற்கு மீண்டும் வருவேன் (தளத்திற்கல்ல பதிவிற்கு).... நன்றி சகோதரா மீண்டும் சந்திப்போம்... (கதையமைப்பில் இந்தியன். அந்நியனை நெருங்க முடியாது தான்...)

Joe said...

தமிழ்,
கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். என்னுடைய கருத்தை சொன்னேன், படம் ஓடுவது இந்திய பொருளாதாரத்துக்கு நல்லதே ;-)
Your comment was deleted as you had used profane words. I have provided my review whether you like it or not, it doesn't matter to me. It's a free country, btw.

If you can't allow access to your profile to others, why do you comment on other blogs?

நன்றி சுதா.

நன்றி (என் பக்கம்) பிரதீப்.

நன்றி பிரதீப்.

நன்றி பிரியா. பத்து வருடங்கள் கதையை மெருகேற்ற பயன்படுத்தியிருக்கலாம், ஆனால்...

Sriakila said...

//Dr. போரா சிட்டியை அழிவு சக்திக்கு பயன்படுத்த red chip மாட்டுறாராம், ஏன்னா சிவப்பு அபாயத்தின் அறிகுறியாம்லே? (அப்புறம் ஏன்டா இந்த நாட்டில பல அறிவு கெட்ட பதர்கள் red signal போட்டு ஐந்து வினாடிகளுக்கு அப்புறமும் உள்ளே பூந்து ஓடுதுங்க?) //

ha...ha..ha.... fantastic question

anto said...

நேர்மையான பகிர்வு...நல்லாயிருக்கு ஜோ..!

கனவுகளின் காதலன் said...

சபாஷ் நண்பரே.

Joe said...

நன்றி ஸ்ரீஅகிலா.

நன்றி அன்டோ.

நன்றி கனவுகளின் காதலன்.

குந்தவை said...

//இது தமிழ்ப் படம், don't ask too many logical questions.//

ha..ha... good review.

Joe said...

நன்றி குந்தவை.