என் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள், நான் ரசித்த சில விஷயங்கள், அரசியல், தகவல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம், என எல்லாவற்றையும் அலசும் ஒரு தளம்.
Friday, 15 October 2010
ஆலனும், நாங்களும்!
ஆலன்: அம்மா, அந்த... அந்த...
அம்மா: என்ன, சட்டுன்னு சொல்லு.
ஆலன்: அந்த பக்கத்து வீட்டுப் பையன் அருண் இருக்கான்ல? ரொம்ப cute-ஆ இருக்காம்மா!
அம்மா: ஆமா, ரொம்ப cute.
ஆலன்: என்னய kiss கொடுக்க சொன்னான், ரெண்டு கன்னத்திலேயும் kiss கொடுத்தேன்.
அம்மா: டேய், எனக்கொரு முத்தம் குடுடா?
ஆலன்: அவன் சின்னப் பையன், நீ என்ன சின்னப் பாப்பாவா? உனக்கெல்லாம் கொடுக்க முடியாது, பே.
===================================================================================
ஆலன்: அப்பா, அந்த மதராசபட்டம் படம் பாத்தோம்ல?
அப்பா: மதராசப்பட்டினம்-டா செல்லம்.
ஆலன்: அதாம்பா, மதராசப்பட்டம்.
அப்பா: சரி, அதில என்ன?
ஆலன்: அந்தப் படத்தில, ஒருத்தர் வந்து "I know 5 languages"-ன்னு சொல்றாருலே? எனக்கு 3 languages தானே தெரியும்? தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி? மூணு தான் வருது?
அப்பா: அது போதும்டா.
ஆலன்: இல்லப்பா, அவரு மட்டும் 5 languages தெரியும்னு சொல்றாரு? எனக்கும் இன்னும் 2 languages சொல்லிக் கொடுங்க.
சரி, நீங்க 6th standard போகும் போது French கத்துக்கலாம்.
எப்போ? 100 days-க்கு அப்புறமா?
இல்ல, அதுக்கு இன்னும் 4.75 வருஷமிருக்கு, உம்ம்ம், 1500 days-க்கு மேல வரும்.
சரி, 2nd standard போனவுடனே நானும் அம்மா கூட போய் Japanese படிக்கப் போறேன்.
சரி, பாக்கலாம்.
===================================================================================
"9 மணி ஆகிடுச்சு, சீக்கிரம் தூங்கு."-ன்னு சொல்லிட்டு ஒரு முத்தம் கொடுத்தேன். அவனும் பக்கத்தில வந்து ஒரு முத்தம் கொடுத்தான்.
"நான் உன்னக் கட்டிப் புடிச்சு, எவ்வளவு feeling-ஓட முத்தம் கொடுத்தேன், நீ என்னமோ கடமைக்கு கொடுக்கிற மாதிரி கொடுக்கிறே?"
என்ன பீலிங்கி, காமெடி பீலிங்கா? வடிவேலு மாதிரி பீலிங் வேணுமா?
ஒன்னும் வேணாம், பேசாம தூங்கு. :-(
===================================================================================
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
ஆலன் கதைகள் நன்றாக இருக்கும். அதுபோலவே எழுதியிருக்கிறீர்கள். nice.
கடைசி பல்புதான் கிளாஸ்..:-)))
//"நான் உன்னக் கட்டிப் புடிச்சு, எவ்வளவு feeling-ஓட முத்தம் கொடுத்தேன், நீ என்னமோ க
டமைக்கு கொடுக்கிற மாதிரி கொடுக்கிறே?"
//
:)
நன்றி எஸ்.கே.
நன்றி கார்த்திக். (நாம பல்பு வாங்குறதில இதுகளுக்கு எவ்வளவு சந்தோஷம்?)
நன்றி குந்தவை.
Post a Comment