Thursday, 2 September 2010

ஆலனுடன் சில தருணங்கள்...

ஆலன்: அம்மா, நீ போய் சீக்கிரம் சமையல் பண்ணும்மா, எனக்கு நெறய வேல இருக்கு.

அம்மா: படிக்க வேண்டியது படிச்சாச்சு, homework எல்லாம் முடிச்சாச்சு, வேறென்னடா உனக்கு வேலையிருக்கு?

ஆலன்: சாப்புடுற வேல தான்

அம்மா: ?!?

=============================================================================================

சில வாரங்களுக்கு முன்பு ஆலனுக்கு ப்ராஜெக்ட் வொர்க் கொடுத்திருந்தாங்க. body parts, names படிச்சிட்டு இருந்தான்.eyes, nose இதெல்லாம் கேட்டவுடனே சரியா சொல்லிட்டான். Tongue வந்ததும் சொன்னான் "T-O-ங் : Tongue".

Bloody British fellows, unnecessarily confusing our kids ;-)

=============================================================================================

ஆலன், உனக்கு தங்கச்சிப் பாப்பா வந்தா நல்லா கவனிச்சுக்குவியா?

உம்ம்ம், நல்லா பாத்துக்குவேன்.

அது அழுதுச்சுன்னா?

என்னோட toys கொஞ்சம் எடுத்துக் குடுப்பேன்.

ரொம்ப அழுதுச்சுன்னா?

நிறைய toys எடுத்துக் கொடுப்பேன். உம்ம்ம்ம்... இல்லப்பா, கொஞ்சம் தான் குடுப்பேன்.

ஏன், நிறைய குடுத்தா என்ன?

நம்மள மாதிரி, பாப்பாவுக்கும் இரண்டு கை தானே இருக்கும்? நான் நெறைய toys கொடுத்தாலும் அதால கொஞ்சம் தானே எடுத்து வெளயாட முடியும்? அதுனால கொஞ்சம் தான் குடுப்பேன். 

=============================================================================================

அம்மா: குட்டி, நேத்து ராத்திரி எனக்கு ஒரு கனவு வந்துச்சுடா, அதில ...

ஆலன்: எனக்கெல்லாம் கனவு வராதும்மா, நல்லா தூங்கிருவேன்.

அம்மா: எனக்கு கனவு வந்துச்சுடா.

ஆலன்: தூங்கும் போது தலையில ரெண்டு பக்கமும், ரெண்டு கை வைச்சு நல்லா புடுச்சிட்டு தூங்கும்மா, அப்போ தான் கனவெல்லாம் வராது.

அம்மா: ?!?

12 comments:

natarajan venkatasubramanian said...

Really Cute :)

Mano said...

Cute moments....Thanks for sharing

கண்ணா.. said...

தகப்பனின் உற்சாகம் நல்லா தெரியுது....

இந்த போட்டோவில் இருக்கறதுதான் ஆலனுக்கு நீங்க அடிச்ச 1எம் எம் @ மொட்டை கட்டிங்கா??? :))

Deepa said...

Loved it! :) esp the last one...
And Alan looks like a cute monk in complete peace with the world.... :)

அஷீதா said...

இன்னும் நிறைய அப்டேட்ஸ் போடுங்க ஜோ :)

வால்பையன் said...

//Bloody British fellows, unnecessarily confusing our kids ;-)//


நாமளும் அப்படி தானே தல படிச்சோம்!

வால்பையன் said...

// தூங்கும் போது தலையில ரெண்டு பக்கமும், ரெண்டு கை வைச்சு நல்லா புடுச்சிட்டு தூங்கும்மா, அப்போ தான் கனவெல்லாம் வராது. //


நல்ல ஐடியாவா இருக்கே, இன்னைக்கு ட்ரை பண்றேன்!

சந்தோஷ் = Santhosh said...

Cute Ones Joe

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))))))))

Sriakila said...

Cute Alan!

jothi said...

அழகு ஜோ

Joe said...

நன்றி ஜோதி.

நன்றி ஸ்ரீஅகிலா.

நன்றி வால்பையன். (முயற்சி செய்து பாருங்கள், "நான் பேசுறதைக் கூட கேட்கக் கூடாதுன்னு காதைப் போத்திக்கிட்டா தூங்குறே?"-ன்னு உங்க மனைவி அடிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை ;-) )

நன்றி கார்த்திக்.

நன்றி சந்தோஷ்.

நன்றி ஆஷிதா. (மாதமொரு எழுதினாலே பல பிரச்சினைகள் வருது, நீங்க வேற?)

நன்றி தீபா. (நேர்ல பார்த்தீங்கன்னா அவனுக்கும் அமைதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை-ன்னு தெரிஞ்சுக்குவீங்க)

நன்றி கண்ணா. சரியாக் கண்டுபுடிச்சிட்டீங்க, இது தான் நானே வீட்டில அடிச்சு விட்ட 1mm cut.

நன்றி மனோ.

நன்றி வெங்கட்.