ஆலன் கிட்ட ஒரு வாரமா முடி வெட்டுரதப் பத்தி பேசிப் பேசி, ஒரு வழியா போன ஞாயிற்றுக் கிழமை சரின்னுட்டான். "கொஞ்சம் தான் வெட்டனும், மொட்டை போடக் கூடாது"-ங்கிற அவனோட நிபந்தனைகளை ஏத்துக்கிட்டு கார்ல கூட்டிட்டு போனேன்.
"அந்த.... முகத்தில (கிரீம்) பூசிட்டு, முடி வெட்டி, தலை வாஷ் பண்ணுவாங்களே, அந்தக் கடைக்குக் கூட்டிட்டுப் போங்க"-ன்னான்.
"Naturals-ஆ? அந்தக் கடைக்கே நானே ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை தான் போவேன், அஞ்சு வயசில உனக்கு அது தேவையா?"-ன்னு மனசில நினைச்சிட்டு, பக்கத்தில இருக்கிற சலூன்-க்கு போயிட்டேன்.
"என்ன, இங்க வந்திட்டீங்க?"
"இது அவுங்களோட branch, வேளச்சேரி வரைக்கும் போக முடியாதவங்களுக்காக, இங்க பக்கத்தில சின்னக் கடை வைச்சிருக்காங்க"
அமைதியா வந்திட்டிருந்தவன், உள்ள நுழையுற நேரம் பாத்து அங்கே இன்னொரு பொடியன் முடி வெட்டுறதுக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருந்தான். இதைப் பார்த்து பயந்திட்டு இவன் உள்ளேயே வர மாட்டேன்னுட்டான். (அடப் பாவி, எவ்வளவு கஷ்டப்பட்டு இவனைக் கூட்டிட்டு வந்தேன், இந்த நேரம் பாத்தா இப்படி நடக்கணும்?)
"சரி, நான் மொதல்ல முடி வெட்டிக்கிறேன், நீங்க அடுத்து வெட்டுங்கடா செல்லம்"
"சரிப்பா"-ன்னு சொல்லிட்டு கடை வாசலிலேயே நின்னுட்டிருந்தான். அரை மணி நேரம் நானும், கடைக்காரரும் உள்ள வரச் சொல்லி கெஞ்சியும் உள்ளேயே வரல.
தொப்பிகளை திருடிட்டு போன குரங்குகள், வியாபாரி தனது தொப்பியை கீழே போட்டதும், அவைகளும் கீழ போட்ட கதை இங்கே உதவவில்லை. நான் முடி வெட்டினப்புறமும் பொடியன் உள்ளே வர்ற மாதிரி தெரியல. குண்டுக்கட்டாத் தூக்கிட்டு உள்ளே போனா, அவன் கதவைப் புடிச்சு இழுத்து மூட முயற்சி பண்ணி, கதவு என் காலில கிழிச்சு, ரத்தம் வந்தது தான் மிச்சம்.
வீட்டுக்கு வந்ததும் அரை மணி நேரம் கெஞ்சிக் கூத்தாடி மிஷின் வைச்சு 1mm cut அடிச்சு விட்டேன். அது கிட்டத்தட்ட மொட்டை தான். ;-)
3 comments:
குழந்தைகளின் உலகமே தனிதான்... அவர்களின் பார்வையில் நாமும் பார்க்க ஆரம்பித்தால் உலகமே சுவாரஸ்யமானதாக மாறிவிடும் :)
ஆலனைப் பற்றி எழுதும்போதெல்லாம் தானாக உங்கள் எழுத்தில் ஒரு குதூகலம் வந்து சேர்ந்து கொள்கிறது ஜோ.. அப்பா..:-))))
நன்றி கண்ணா.
நன்றி கார்த்திக். ஒரு வாரம் ஷூ போட முடியாம திரிஞ்சேன், குதூகலமா? (ஒரு தகப்பன் வாழ்க்கையில இதெல்லாம் சாதரணமப்பா-ன்னு போய்டணும் போல)
Post a Comment