Saturday, 7 August 2010

எனக்கு 5, உனக்கு 15!

நம்ம நாட்டில சில பேருக்கு வயசாகிறதே பிடிக்காது, ஒவ்வொரு பிறந்த நாளிலேயும் பொலம்புவாங்க, "அய்யய்யோ வயசு ஏறிடிச்சே..."-ன்னு. இந்த நாட்டில பல குழந்தைகள் பிறந்ததுமே இறந்து போய்டுதுங்க (52/1000 says Google report). அதுக்கப்புறம் எத்தனையோ பேர் இளம் வயதிலேயே விபத்தினாலோ, நோயினாலோ இறந்து போகிறார்கள். இத்தனை வருஷம் உயிரோட வாழ வைச்ச கடவுளுக்கு நன்றி சொல்லாம, ஏன்டா பொலம்புறீங்கன்னு திட்டுவேன்.

மதுரையில இருக்கிற என்னோட சித்திக்கு 45 வயசு தானிருக்கும். ஆனாலும் ஏன் பையனுக்கு அவுங்க அப்பாயி தானே? அவுங்கள என் பையன் அப்பாயி-ன்னு சொல்றது புடிக்கல, "டேய், ஆன்டின்னு தான் கூப்பிடனும்"-ன்னு மிரட்டி வைச்சிருந்தாங்க.

அவுங்க அத்தைன்னு ஆகிட்டா, சித்தி பொண்ணுங்களை இவன் எப்படி அத்தைன்னு கூப்பிட முடியும்? அவுங்களும் பள்ளிக்கு, கல்லூரிக்கு போகிற பசங்க. அதுனால அக்கா-ன்னு கூப்பிடச் சொல்லிட்டாங்க. இப்படியே ஆளாளுக்கு உறவு முறைய மாத்திட்டே போனதால வந்த கோபத்தில நான் கேட்டேன் "என்னோட தங்கைகளும், என் பையனுக்கு அக்கா-ன்னா, நான் என்ன அவனுக்கு அண்ணனா?"

சரி, இந்தப் பிரச்சினைக்கு என் பையன் கிட்டேயே தீர்வு கேட்போம்னு அவன் கிட்ட கேட்டேன் "என்னடா, என்னை உன்னோட அண்ணன் ஆக்கிட்டாங்க? உனக்கு என்ன வயசு?"

எனக்கு அஞ்சு.

அப்பாவுக்கு என்ன வயசு?

உம்ம்ம்ம், பதினஞ்சு.

குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று சொல்வார்கள், ஆனால் பெரியவர்கள் நம்புவதில்லை, சென்னை தி.நகரில் நடக்கும், 3 - 16 வயதுள்ள குழந்தைகளுக்கான சல்சா நடன வகுப்பில், என்னைச் சேர்க்க மாட்டேன் என்று சொல்கிறார்கள் ;-)

10 comments:

natarajan venkatasubramanian said...

சிரிப்புதான் போங்க!
சல்சாவில் சேர்க்காதவர்களை எதிர்த்து போராட்டம் வேணா நடத்தலாம்

அஷீதா said...

எனக்கு அஞ்சு.

அப்பாவுக்கு என்ன வயசு?

உம்ம்ம்ம், பதினஞ்சு.//



:))))))) உங்க புள்ள கணக்குல ரொம்ப வீக்

Joe said...

நன்றி வெங்கட்.
போராட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுங்க.

நன்றி ஆஷிதா, நம்ம பையன் தானே, கணக்கில சுமாராத் தான் இருப்பான்?
நீங்க லாஜிக் பாக்கிறதில வீக் போல? ;-)

Jeya said...

Children will not say lies.. I agreed...

I am 3 yrs younger than you. But enna Barla allow pannurangappa...

Joe said...

Jey,
They have changed the rules in USA, eh? ;-)

Joe said...

நன்றி விருட்சம்.

Deepa said...

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன்.
இய‌ன்ற‌போது எழுத‌வும்.
http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_13.html

Selvaraj said...

//அப்பாவுக்கு என்ன வயசு?

உம்ம்ம்ம், பதினஞ்சு//

பெண்கள்தான் வயதை ரகசியமாக வைப்பார்கள், என கேள்வி பட்டிருக்கிறேன். நீங்களுமா?

Joe said...

நன்றி தீபா, நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். (இந்த தொடர் பதிவு இம்சையை பதிவர்கள் நிறுத்தவே மாட்டீங்களா? ஹீ ஹீ)

நன்றி செல்வராஜ், ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை.

குந்தவை said...

//குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று சொல்வார்கள், ஆனால் பெரியவர்கள் நம்புவதில்லை, சென்னை தி.நகரில் நடக்கும், 3 - 16 வயதுள்ள குழந்தைகளுக்கான சல்சா நடன வகுப்பில், என்னைச் சேர்க்க மாட்டேன் என்று சொல்கிறார்கள் ;-)

:)