நேற்றிரவு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை, அல்லது தூங்கி விடக் கூடாதென்று புரண்டு கொண்டிருந்தேன் என்றும் சொல்லலாம், FIFA WC 2010 Semifinals - Netherlands Vs Uruguay match பார்க்காமல் தூங்கி விடக் கூடாதென்ற பரபரப்பு.
என்னப்பா, தூக்கம் வரலையா?
அது ஒரு பெரிய fish, உங்களுக்குத் தெரியாதா? பெருசா இருக்குமே, boat எல்லாம் அடிச்சு ஒடைக்குமே? பல்லெல்லாம் sharp-ஆ வைச்சுட்டு கடிக்க வருமே?
shark வந்து அதையெல்லாம் அப்படியே முழுங்கித் தின்னுரும்லே?. அதுனாலே அதுங்கள்லாம் பயந்து ஓடி ஒளிஞ்சுக்கிச்சாம்.
உம்ம்ம், தூக்கம் வரல, நீ வேணும்னா கதை சொல்லி தூங்க வைக்கிறியா?
ஒரு ஊரில ஒரு பெரி...ய தண்ணி இருந்துச்சாம்.
கடல் மாதிரியா?
ஆமா, அன்னக்கி பெசன்னகர் (Besant Nagar) போனோம்ல, அங்கே இருந்துச்சே, அது மாரி.
சரி, அப்புறம்?
அதுக்குள்ள சின்ன சின்ன மீனெல்லாம் இருந்துச்சாம்.
உம்ம்ம்
அப்புறம் ஒரு shark இருந்துச்சாம்.
shark-னா என்ன?
அது ஒரு பெரிய fish, உங்களுக்குத் தெரியாதா? பெருசா இருக்குமே, boat எல்லாம் அடிச்சு ஒடைக்குமே? பல்லெல்லாம் sharp-ஆ வைச்சுட்டு கடிக்க வருமே?
தமிழ்ல அதுக்கு பேரு சுறா.
அதான், சுறா வந்துச்சாம், அது வந்தவொடனே சின்ன மீனெல்லாம் பயந்து ஓடுச்சாம்.
ஏன்?
shark வந்து அதையெல்லாம் அப்படியே முழுங்கித் தின்னுரும்லே?. அதுனாலே அதுங்கள்லாம் பயந்து ஓடி ஒளிஞ்சுக்கிச்சாம்.
சரி
அப்புறம் ஒரு திருடன் boat-ல வந்தானாம், shark வந்து அவனைக் கடிக்க வந்துச்சாம்.
உம்ம்ம்
அவன் பயந்து போயி வேகமா ஒட்டுனானாம். சுறா பின்னாலேயே தொரத்திட்டு speed-ஆ வந்துச்சாம்.
அப்புறம்?
அவன் வேகமா போயி, ஸ்டேஷன்ல இருந்த மெஷின்ல டிக்கெட் எடுத்திட்டு ட்ரைன்ல ஏறிப் போயிட்டானாம். shark-க்கு கையில்லையில்ல? அதுனால எப்படி டிக்கெட் எடுத்திட்டு ட்ரைன்ல போறதுன்னு தெரியாம அங்கேயே நின்னுடுச்சாம்.
(தண்ணில போய்ட்டுருந்தவன் திடீர்னு எப்படி ட்ரைன்ல போவான்னு யோசிச்சேன், ஒரு வேளை நம்ம பொடியன் Spirited Away படத்தைப் பார்த்த விளைவா இருக்கலாம்)


5 comments:
Nice thala..
How old is your kid. Kids are so smart nowadays.
Thanks Vinoth.
Thanks Anamika. My son is 5 years old.
Intha pathivil enakku pudithathe... neenga ethir kelvi kettu konde irrunthathuthan....
pothuva, nama allunga kulanthaika katha sollumpothu... mmm solurathoda sari...
Nanum inni muyarchi paanuren...
நன்றி ஜெயக்குமார்.
Post a Comment