பள்ளியில் சேர்க்கும் போது சில பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் சொல்வது "அவன் கண்ணை மட்டும் விட்டுட்டு, எங்கே வேணும்னா அடிங்க சார். நல்லா படிச்சு, ஒழுக்கமான பையனா வளரனும் சார், அவன் எதாச்சும் தப்பு பண்ணினா, அடிக்கிறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு, நான் எதுவும் கேக்க மாட்டேன். அடி உதவுற மாதிரி அண்ணன், தம்பி உதவாது".
இன்றைய காலத்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இது போல கோரிக்கை எதுவும் வைக்காதது இக்கால குழந்தைகள் செய்த பாக்கியம். குறைந்த பட்சம், மாநகரத்துக் குழந்தைகள் ஆசிரியர்கள் தங்களை அடிப்பது சட்டப்படி தவறு என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். பெற்றோர்கள் - ஆசியர்கள் சந்திப்பில், குழந்தையை லேசாக அதட்டியதற்கு கூட ஆசிரியர்கள் விளக்கம் தர வேண்டியிருக்கிறது.
எனது பெற்றோர்கள் என்னை அதிகம் அடித்ததாக நினைவில்லை. நான் ரொம்ப அதிகமாக சேட்டை புரிந்த நேரங்களில், அப்பா முதுகில் ஒரு அடி அடித்து, முட்டி போட வைத்திருக்கிறார், இல்லையென்றால் காதைத் திருகுவார். பெல்டால் அடி வாங்குவது, காது ஜவ்வு அறுந்து போகுமளவுக்கு அறை வாங்குவது, முதுகுத் தோல் சிவந்து போகும் அளவுக்கு பிரம்பால் அடி வாங்குவது போன்ற கொடுமைகள் எல்லாம் எனக்கு நிகழவில்லை. நாம தான் எல்லை மீறிட்டோம், நல்ல பையனா இருக்கணும்னு தான் அடிக்கிறாங்கன்னு புரிந்ததால், பால்யம் குறித்து கசப்பான நினைவுகளேதும் எனக்கில்லை.
சில வாரங்களுக்கு முன்பு கொல்கோத்தா La Martiniere பள்ளி மாணவன் தலைமையாசிரியர் பிரம்பால் அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்டிருப்பீர்கள்.
ஒரு மனிதனுக்கு ஆபத்து வரும் சமயத்தில் கார்டிசால் என்ற வேதிப் பொருள் உடலில் சுரக்கிறது. குழந்தைகளை ஆசிரியரோ அல்லது பெற்றோரோ அடிக்க வரும் போதும் இதே போல கார்டிசால் அவர்களது உடலில் சுரக்கிறது. யாராவது உங்களை அடிக்க வரும் போது, நீங்களும் முஷ்டியை மடக்கி அவர்களை தாக்க முயல்கிறீர்கள். ஒரு மணி நேரம், மடக்கியபடியே வைத்திருந்தால், மரத்துப் போய் வலி உண்டாகிறது. இதே போல குழந்தைகளை தினமும் ஆசிரியர்கள்/பெற்றோர்கள் அடித்தும், மிரட்டியும் வைக்கும் போது, கார்டிசால் அதிகம் சுரந்து பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளை தினமும் அடிப்பதும், மிரட்டுவதுமாக இருந்தால் அவர்களுக்கு சிறு வயதிலேயே வாழ்க்கையின் மீது வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தூண்டப்படுகிறது என்கிறார்கள் மனவியல் ஆராய்ச்சியாளர்கள். ("குழந்தைகளை நன்றாக வளர்ப்பது எப்படி?" என்ற குறுந்தகடு பார்த்ததில் கிடைத்த தகவல்கள்)
கனடா நாட்டில் பெற்றோர்கள் / ஆசிரியர்கள் குழந்தைகளை அடித்ததாக புகார் வந்தால், 20 நிமிடங்களுக்குள் காவலர்கள் அவர்களை கைது செய்யுமளவுக்கு கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. எனினும் "குழந்தைகளை எப்போதும் அடிக்காமலே வளர்க்க முடியுமா?" என்று கேட்டால் "முடியாது" என்று தான் சொல்வேன். பொறுமை கடலினும் பெரிது என்றார் திருவள்ளுவர், எனினும் கடலுக்கும் எல்லை இருக்கத்தானே செய்கிறது? இந்த காலத்துக் குழந்தைகள் எல்லா சமயங்களிலும் அவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள், தவறு என்று சுட்டிக் கட்டினாலும் ஏற்றுக் கொள்ளாத சமயத்தில் லேசாக முதுகில் தட்டி தான் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. சில மணி நேரங்கள் கழித்து, "ஏன் இப்படி செய்தாய்? உன்னை அடிப்பது எனக்கும் மன வருத்தமளிக்கிறது, தயவு செய்து இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்" என்றால் குழந்தைகள் புரிந்து கொள்ளும்.
தவறு செய்தால் சிறு தண்டனை கிடைக்கும் என்று உணரும் அளவுக்கு மட்டுமே குழந்தைகளை அடிப்பது இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
- ஊஞ்சல் ஆடும் போது விழுந்த குழந்தையை "சனியனே, சொன்ன பேச்சு கேக்க மாட்டியா, இப்போ வீட்டுக்குப் போய் நான் தானே மருந்து போடணும்?" என்று அடிப்பது,
- அலுவகத்தில் ஏற்பட்ட மன உளைச்சலில், வீட்டில் கண்ணாடி கோப்பையை உடைத்த குழந்தையை கண் மண் தெரியாமல் அடிப்பதெல்லாம் நிச்சயம் தவறானது.
சனியன், முண்டம், பரதேசி, பன்னாடை என்ற சொற்களை உங்கள் குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது என்று நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் குழந்தையிடம் பேசும்போது, அவர்கள் முன்னிலையில் மற்றவர்களிடம் பேசும்போது, அவற்றை தவிர்க்க வேண்டும். இது போல நீங்களே மறைமுகமாக தகாத வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து விட்டு, "பிறகு ஏன் இப்படி பேசுகிறாய்?" என்று குழந்தையை அடிப்பதில் நியாயமில்லை.
"ரொம்ப நேரம் வலிக்காத மாதிரி, சட்டுன்னு அடிச்சு முடிங்க"-ன்னு சொல்றான! ;-)

15 comments:
அருமை ......நல்ல பதிவு
("குழந்தைகளை நன்றாக வளர்ப்பது எப்படி?" -சுட்டி(link) இருந்தால் தாருங்கள் )
Everybody should read it.
அவசியமான பதிவு ஜோ.
சொன்ன யாரு கேக்கறா? சட்டம் போட்டு திருத்த முடியாது, இவங்கள. பள்ளிக்கூடத்துல படிக்கும் போது நிறைய தற்கொலைகள் பார்த்தாச்சு. தனக்கு பதவி உயர்வு கிடைக்காத கோவத்துல எங்க க்ளாஸ் பையன போட்டு ஒருத்தர் அடிச்சார். சிலர் ப்ரிஸிபால்கிட்ட புகார் பண்ணிணாங்க. அவர் 'நாங்க இப்படித்தான். ஒன்னால படிக்க முடிஞ்சா படி, இல்லாட்டி வெளில போ'ன்னு சொல்லிட்டார்.
எனக்கு தெரிஞ்ச ஒரு அம்மா தன் பொண்ண நாயேன்னு திட்டுவாங்க. பதிலுக்கு பொண்ணு வேற மாதிரி திட்டும். நீங்க சொல்வது தான் திரும்ப வரும்.
இதைப் போல சுகி.சிவம் அவர்கள் பேசிய பதிவு.
http://sivasiva.dk/sotpolivukal/nallakudumpam.wma
எல்லாம் நியூட்டனின் மூன்றாவது விதிப்படி தான். நூலைப் போல சேலை.
பிரம்பை கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் என்கிறது விவிலியம்... என்னைக் கேட்டால் அவசியத்திற்கு(கார்ட்டூனைப் போலவே! அதிகம் வலிக்காமல்) அடிக்கிறது தப்பில்லை என்றே கருதுகிறேன்.
மிக அருமையான பதிவு ஜோ
Nice one, must be readed by all parents who both are working.
Feel that this is TOO late for my father :-)
I like the highlighted 2 points, keep writing.
Lets change ours.
Jp
நன்றி (என் பக்கம்) பிரதீப்.
நன்றி அனாமிகா. உங்களோட நகைச்சுவை உணர்வைப் பத்தி என்ன சொல்றது? உங்களையும் சேர்த்து எட்டு பேரு தான் இந்த இடுகையை படிச்சிருப்பாங்க போலருக்கு ;-)
நன்றி எட்வின்.
நன்றி வெங்கட். சுகி.சிவம் அவர்களின் பேச்சைப் பகிர்ந்ததற்கு நன்றி.
நன்றி உலவு.
ஜோ இதை நான் முன்பே படித்து விட்டாலும் இப்பொழுது தான் கம்மென்ட் பண்றேன்..
நல்ல பதிவு..எங்க அப்பா கூட என்ன ஒரே ஒரு தடவை தான் அடிச்சு இருக்காரு அதுவும் UKGல நல்ல நியாபகம் இருக்கு அதுக்கப்புறம் அடிச்சதா நியாபகம் இல்ல..
(அதான் உருப்படாம போய்டனு நினைக்காதிங்க)..:))
ஜோ இதை நான் முன்பே படித்து விட்டாலும் இப்பொழுது தான் கம்மென்ட் பண்றேன்..
நல்ல பதிவு..எங்க அப்பா கூட என்ன ஒரே ஒரு தடவை தான் அடிச்சு இருக்காரு அதுவும் UKGல நல்ல நியாபகம் இருக்கு அதுக்கப்புறம் அடிச்சதா நியாபகம் இல்ல..
(அதான் உருப்படாம போய்டனு நினைக்காதிங்க)..:))
நன்றி வினோத். அடியே வாங்கினதில்லையா? ரொம்ப கொடுத்து வைத்தவர் நீங்க!
நன்றி (என் பக்கம்) பிரதீப்.
நன்றி எட்வின்.
நன்றி வெங்கட்.
சுகி.சிவம் அவர்களின் பேச்சைப் பகிர்ந்ததற்கு நன்றி.
நன்றி அனாமிகா.
நன்றி உலவு.
Joe, eppadi irrukeenga!
Mr.Arulsamy adipaara... Migavum achariyama irrukku....
நன்றி டேனி.
நன்றி ஜெயக்குமார். (பெரும்பாலான சமயங்களில் மிரட்டல் தான், ரொம்ப சேட்டை பண்ணினா சில சமயங்களில் காதைத் திருகுவாங்க. ஒன்பதாம் வகுப்பு வரை இது போல இரண்டு, மூன்று முறை தண்டனை வாங்கியதுண்டு)
Joe,
Totally agree with what you say. Moderation is definitely the key.
I started out replying in a comment... and it grew too long. So I posted something like a response to your post, in my blog:
http://writingabit.wordpress.com/2010/08/10/to-beat-or-not-to-beat/
Raising up children is such a pleasure and a responsibility at the same time.
Thanks Tina.
//Raising up children is such a pleasure ...
//
I thought you were going to say "and a pain in the ass" ;-)
I might.... a few years later!!! ;-P
Post a Comment