Saturday, 15 May 2010

நாய்க்குட்டி சொன்ன (சின்னஞ்சிறிய) கதை!

ஐந்து வயது நிரம்பிய நாய்க்குட்டியொன்று, சேட்டைகள் அதிகம் புரிவதென்றும், யாருக்கும் கீழ்ப்படியாததென்றும் பெயர் வாங்கியிருந்தது. பக்கத்து வீட்டில் இரண்டு வயது நாய்க்குட்டியொன்று வந்து சேரவும், அதற்கு நற்பழக்கங்கள் கற்றுத் தரும் பெரியண்ணனாக மாறியது.

பெரியது lego blocks கொண்டு பூமராங் போன்றவொன்றை செய்து வைத்திருந்த போது, சிறியது "அண்ணா, அதென்ன?" என்று கேட்டது.

அது கத்தி மாதிரிடா.

அப்தியா, அதென்ன பன்னும்?

அத அப்டியே சுத்தி விட்டோம்னு வைச்சுக்க, திருடனைப் போயி வெட்டிரும். அப்புறம் டைகர், டைகரா வந்து அவனை கடிச்சுக் கொதறிடும்.

அப்றம்?

அப்புறமா, போலீஸ்காரரு வந்து திருடனைப் புடிச்சு, இட்லி, தோசையெல்லாம் சுட்டு, அவன வெட்டி வெட்டி எண்ணையில போட்டு வறுத்து தின்றுவாரு. அப்புறம் monkey வேஷம் போட்ட திருடன் ஒருத்தன் வருவான். அவனையும் போலீஸ் புடிச்சுரும்.

அப்றம்?
அவ்ள தான், கத முடுஞ்சு போச்சு. போய் தூங்கு!

கதை சொன்ன நாய்க்குட்டி என் காதை நக்கிட்டு சிரிக்கிது!

4 comments:

நேசமித்ரன் said...

சொன்ன நாய்க்குட்டி என் காதை நக்கிட்டு சிரிக்கிது!


:)

கார்த்திகைப் பாண்டியன் said...

கொடுத்து வைத்த மனிதரய்யா நீர்..:-)))

சூரியன் said...

:) nice story ha ha ha

Joe said...

நன்றி சூரியன். (ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க?)

நன்றி கார்த்திக்.

நன்றி நேசமித்ரன்.