சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை ஞானதீபம் பெரியம்மா, இக்னேஷியஸ் பெரியப்பாவோட ஐம்பதாவது திருமண ஆண்டுவிழா. மதுரை ஞானஒளிபுரம் கோவிலில் திருப்பலி பூசை, அப்புறம் பக்கத்தில இருந்த மண்டபத்தில மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல்-ன்னு கலக்கலான மதிய விருந்து. தாஸ் விழாவுக்கு வந்த உறவினர்கள் சாப்பிட்டு முடிச்சு போற வரைக்கும் நல்லா கவனித்துக் கொண்டார். (தாஸ் எனது உறவினர் என்பதை விட, MCA classmate ஆனதலிருந்து நல்ல நண்பர்)
பிரசங்கத்தில் பாதிரியார் கூறிய சில குட்டிக் கதைகளை, கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தொலைக்காட்சியில் நெடுந்தொடர் பார்த்துக் கொண்டிருந்த மனைவி, கணவரை அழைக்கிறார்.
நான் தான் இதெல்லாம் பாக்க மாட்டேன்னு தெரியும்ல, என்னை ஏன் கூப்பிடுறே?
வாங்க, இங்க வந்து பாருங்க, அந்த நடிகர் எவ்வளவு நல்லவரா இருக்காரு, மனைவி கிட்ட எவ்வளவு பாசமா நடந்துக்கிறாரு.
அப்படியெல்லாம் என்னால இருக்க முடியாது.
ஏன் இருக்க முடியாது? பாருங்க, அவரு எவ்வளவு அன்பா நடந்துக்கிறாரு.
ஏய், அந்தாளு தினமும் 25,000 சம்பளம் வாங்கிட்டு அன்பா இருக்கிற மாதிரி நடிக்கிறான். நிஜ வாழ்க்கையில உன்னால அப்படி பணம் தர முடியுமா?
நிதர்சனம் என்னன்னா, குடும்பத்தில சில சண்டை, சச்சரவுகள் வரத் தான் செய்யும். எப்பவுமே அன்பாகவும், அமைதியாகவும் கணவனோ, மனைவியோ இருக்க முடியாது.
திண்ணையில் நாற்காலியில் அமர்ந்தபடி செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கும் கணவர் சொல்றார் "நான் சீக்கிரம் கெளம்பனும், குளிக்கிறதுக்கு வெந்நீர் போட்டு வை".
மனைவி பதிலுக்கு "அதெல்லாம் முடியாது" என்கிறார்.
இன்னும் பத்து நிமிஷத்தில வெந்நீர் தயாரா இருக்கணும், இல்லைன்னா என்ன நடக்கும்னு தெரியாது.
பத்து நிமிஷத்தில இல்ல, முப்பது நிமிஷம் கழிச்சு வந்தாலும் வெந்நீர் தயாராயிருக்காது, எனக்கு வேற வேலை நிறைய இருக்கு.
சடார்னு எந்திரிச்ச கணவர், நாற்காலிய தள்ளிட்டு, வீட்டுக்குள்ள கோபத்தோட வந்து, மனைவிய பார்த்து சொல்றார் "சரி...அப்போ நான் பச்சைத் தண்ணியிலேயே குளிச்சுக்கிறேன்".
ஒரு குடும்பத்துக்குள்ள நீயா, நானா பாத்திரலாம்னு முறுக்கிட்டு நிக்கிறத விட, சின்னப் பிரச்சினைகளை ஊதிப் பெருசாக்கிரத விட, குடும்பத்தில ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலைன்னா, அதுக்கு வேறு வழியில் தீர்வு காண முடியுமான்னு பார்க்கணும்.
"குடும்பம் என்பதொரு வன்முறை அமைப்பு. குடும்பத்தினர் ஒருவரையொருவர் அடிமைப்படுத்திக் கொண்டு, சொற்களாலே குத்திக் கிழித்து காயப்படுத்திக் கொள்கிறோம்" என்பது போன்ற கருத்துகளை ஓஷோ முதல் எஸ்.ரா வரை பலருடைய கட்டுரைகளில் வாசித்திருப்பீர்கள். இருப்பினும் குடும்பம் என்றொரு அமைப்பில்லாமல் இந்த உலகம் சீராக இயங்க முடியுமா தெரியவில்லை.
பிறதொரு சமயம் விரிவாகப் பேசுவோம்.


5 comments:
டெய்லி பச்சத் தண்ணியிலதான் குளிக்குறீங்களா நண்பா..:-))))
சென்னை மாநகரத்தில குழாய தொறந்தாலே வெந்நீரு தான் நண்பா வருது. ;-)
இன்னும் கொஞ்சம் விரிவா பேசி இருக்கலாமோ ?
:)
மேலொட்டமா பார்த்தா குடும்பம் கோயில் மாதிரிதான் தெரியும். ஆனா, ஒரு நாள் கூட எனக்கு அப்படி தோனியதே இல்ல.
நன்றி நடராஜன்.
நன்றி நேசமித்திரன். நேரில் சந்திக்கும் போது, விரிவாகப் பேசலாம்.
Post a Comment