வினவு தளத்தில் வந்த சில இடுகைகளை முன்பொரு காலத்தில் வாசித்து ரசித்ததுண்டு. இப்போதெல்லாம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. பலருக்கும் மன உளைச்சலை உண்டாக்குவதென்றே எழுதுகிறார்களோ என்று தோன்றுகிறது. சமீபத்தில் வினவு தளத்தில் ஒரு இடுகையில் படித்த சில வரிகள், அதற்கான என் எதிர்வினை கீழே.
//
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு ஆளெடுப்பதே, அழகிப் போட்டி ஸ்டைலில் நடத்தப்படுகிறது. இதனால், அங்கு புதிது புதிதாக அழகிகளும், அழகன்களும் வந்து போன வண்ணம் இருக்கிறார்கள்.
//
அபத்தமாகப் பேசுவதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் எத்தனை ஆளெடுப்பு தேர்வுகளுக்கு நீங்கள் போயிருக்கிறீர்கள்? அங்கே aptitude test, group discussion, tech & HR interviews எல்லாம் முடிந்து வருவதற்குள் பல பேர் நொந்து நூலாகிப் போகிறார்கள். நீங்கள் என்னவோ, allen solly pants & louis philippe shirt போட்டுட்டு போனால் வேலை கிடைத்து விடும் என்கிற மாதிரி பேசுகிறீர்கள்?
//
வேலைப் பளுவில் ஏற்படும் மனச்சோர்வைக் குறைக்க, “அவுட்டிங்” என்ற மேல்தட்டு “”பார்ட்டி” கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால், மேல்தட்டு வர்க்கத்துக்கேயுரிய எல்லா பண்பாடுகளும், இவர்களிடம் தொற்றிக் கொள்கிறது. ஏற்கெனவே மனதளவில் பணக்காரர்களைப் போலவே வாழ ஆசைப்படும் நடுத்தர வர்க்க இளைஞர்கள், எளிதாக இந்தக் கலாச்சாரத்தில் மூழ்கி விடுகின்றனர்
//
மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கும் முன்னரே பெங்களூர் போன்ற நகரங்களில் மதுபான, நடன விடுதிகள் இருந்தன.
குடி என்பதை தீண்டத் தகாத பழக்கமாக ஏனய்யா சித்தரிக்கிறீர்கள்? அரசியல்வாதிகளும், கலாச்சாரக் காவலர்களும் "அது நமது கலாச்சாரத்திற்கும், பண்பாட்டுக்கும் எதிரானது" என்று வேறு அள்ளி விடுகிறீர்கள். (இவர்களது வீடுகளில் கண்டிப்பாக மினி-பார் இருக்கும் என்பது வேறு விஷயம்) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நம் மக்கள் முன்பு சோமபானம் குடித்ததாக வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லியதெல்லாம் தவறோ? அது அனுமதியில்லாமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருளோ?
அரசாங்கமே டாஸ்மாக் திறந்து வைத்த பிறகு எல்லா தரப்பு மக்களும் குடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அளவோடு குடிப்பதும், அதீதமாக குடித்து அழிந்து போவது தனிப்பட்ட மனிதனின் கையில் தான் இருக்கிறது.
வாடிக்கையாளர்களுடன் வாரம் ஒரு முறை விருந்துக்கு செல்லும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் managers இருபது பேரில், குடிப்பழக்கம் இல்லாதவர்கள் பத்து பேரை என்னால் காட்ட முடியும்.
நாடு முழுவதும் மதுபான விற்பனை தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்துங்களேன்? தயாரிப்பாளரை விடுத்து நுகர்வோரை குறி வைத்து தாக்குவானேன்?
//
இந்த நவீன மூளை தொழிற்சாலையில் உள்ள வேலைப்பளு காரணமாக, கணவன் மனைவி இடையே பாலுறவில் பல சிக்கல்கள் தோன்றுவதாக மனநல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கணவன் மனைவி இடையே உறவு சரியில்லாத பொழுது, சோரம் போவது எளிதாகி விடுகிறது.
//
சோரம் போவது எளிதாகி விடுகிறதா?!? உதாரணமாக ஆறு பேரை sample packet என்று எடுத்துக் கொள்வோம். மென்பொருள் நிறுவனங்களில் பத்து வருடங்களாக பணி புரியும் நானும், எனது நெருங்கிய ஐந்து நண்பர்களும் சோரம் போகவேயில்லையே? எந்த பிரச்சினையும் பண்ணாம ஓரமாத் தான் போய்ட்டுருக்கோம்.
கொஞ்சம் விட்டா, அடுத்த இடுகையில் "ங்கொய்யாலே, மென்பொருள் நிறுவனங்கள் வந்ததால தான் கோவலன் கண்ணகியை விட்டுட்டு, மாதவி கிட்ட போனான். இந்த நிறுவனங்களை எல்லாம் செருப்பால அடிச்சு நாட்டை விட்டே தொரத்தனும்." -ன்னு எழுதுவீங்க போலேருக்கே?
பொதுவாகவே, சாரு நிவேதிதா முதல் "கற்றது தமிழ்" ராம் வரை பலதரப்பட்ட படைப்பாளிகளுக்கும் மென்பொருள் வல்லுனர்களைப் பற்றி தவறான தகவல்களின் அடிப்படையில் உருவான ஒரு பிம்பமே பதிந்து போயிருக்கிறது. அதையே மேலும் மேலும் சிதைத்து மக்களிடம் அள்ளி வீசுகிறார்கள்.
"நண்பரின் மகளை சந்தித்தேன், சென்ற மாதம் கணினி பொறியியல் படித்து முடித்த அவளுக்கு மாதம் 60,000 ரூபாய் சம்பளம்".
"26 வயது நிரம்பிய ஒருவனுக்கு மாதம் இரண்டு லட்சம் சம்பளம்."
உண்மை என்னவெனில், சில மாதங்களுக்கு முன்பு சந்தித்த, பெங்களூர் சகபதிவரின் அறைப் பங்காளிக்கு smallcap network company-யில் முதல் மாத சம்பளம் 7500. எனது தம்பி (சித்தப்பா மகன்) அடுத்த மாதம் இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் நிறுவனத்தில் சேரப் போகிறான், சம்பளம் மாதம் 26,000 ரூபாய். மென்பொருள் நிறுவனங்களில் குறைந்த பட்ச, அதிக பட்ச (ஆரம்பக்கட்ட) ஊதியம் இவ்வளவு தானிருக்கும். (அதிலும் வரி என்ற பேரில் 30% அரசாங்கம் எடுத்துக் கொள்ளும், அதில் ஐந்து சதவிகிதமாவது நாட்டு வளர்ச்சிக்கு பயன்பட்டாலும் பரவாயில்லை, பல கோடி ரூபாய்கள் ஊழல் செய்து அரசியல்வியாதிகள் மட்டும் அள்ளிக் கொண்டு போகிறார்கள்.)
மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றி தவறான அபிப்ராயத்தை எழுத்தாளர்களும், சினிமாக்காரர்களும் தொடர்ந்து கட்டமைத்து வருகிறார்கள். உங்களுக்கு அருகிலேயே இருக்கும் பல பெண்கள் பகுதி நேர வேசிகளாக இருப்பது பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை, சினிமாக்கள் எடுத்து சாடுவதில்லை? உங்களுக்கு மென்பொருள் நிறுவனங்களின் வளாகத்தின் வாசல் வரை மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட போதும், கற்பனைக் குதிரைகளை ஓட விட்டு, கட்டுக் கதைகளை ஏன் எழுதுகிறீர்கள்? BPO நிறுவனங்களுக்கும், IT நிறுவனங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றே தெரியாத நீங்கள், BPO பெண்கள் சில பேர் செய்கிற பிழைகளைப் பார்த்து, ஒட்டு மொத்தமாக எல்லோரையும் ஏன் சாடுகிறீர்கள்?
சரி, பெங்களுர் போன்ற நகரங்களில் மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள் jeans / t-shirt போன்ற மேல்நாட்டு நாகரீக உடை அணிந்து கொள்கிறார்கள் என்ற போதிலும், அவர்கள் இந்த உடை தான் அணிய வேண்டும் என்று கட்டளையிட நீங்கள் யார்? "அவை இந்த நாட்டின் கலாச்சார உடைகள் அல்ல" என்று குற்றம் சாட்டும் நீங்கள் மட்டும் வேட்டியும், கதர் சட்டையும் அணிந்தா வேலைக்குப் போகிறீர்கள்? மேசைக்கு கீழ கால்களை ஒளிச்சு வைக்காம, எந்திரிச்சு பாருங்க, நீங்க போட்டுருக்க குழாய் ஆங்கிலேயன் கண்டுபிடிச்சது தான்.
மென்பொருள் நிறுவனங்களில் எனது, உனது சகோதரிகள் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? அவர்கள் எத்தனையோ பேர் ஒன்பது மணிக்கு வேலையை தொடங்கி, மாலை ஏழு மணிக்கு முடித்து விட்டு, இரவு எட்டு மணிக்கு மேல் கொஞ்ச நேரம் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து, தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் பற்றி எந்த கதையும் எழுத மாட்டார்கள், because they are so bloody boring! So please don't look at few bad apples and try to generalise the whole population as immoral.
இறுதியாக, மென்பொருள் நிறுவனங்களில் வேலை புரிவோரைக் குறித்து அவதூறாக எழுதும் பல படைப்பாளிகளுக்கு எந்தவொரு தகுதியும், தார்மீக உரிமையும் கிடையாது என்பதே உண்மை. "இரண்டு பொண்டாட்டி இல்லாத, extra-marital affairs புரியாத, கற்புள்ள எழுத்தாளர்கள் மட்டும் அவர்களைப் பற்றி அவதூறாக எழுதட்டும்" என்று சட்டம் வந்தால், அப்படி எழுத எவனும் முன் வர மாட்டான்.


24 comments:
பொங்கிட்டீங்களே ஜோ..! வெட்டியா பேசிட்டு இருக்கறவங்களுக்கு நடுவுல சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும்னு நெனக்கற நெறய பேரு மென்பொருள் நிறுவனங்கள்லதான் வேலை பாக்கறாங்க. தனிமனித ஒழுக்கம்தான் எல்லாத்தயும் முடிவு பண்ணுதே தவிர அவங்க பாக்கற வேலை இல்ல. Good Article..!
ஜோ
பார்த்துங்க..!
ஆட்டோவில் ஆள் வரும்னு சொல்றாங்களே
எதிர்த்து எழுதினா கெட்ட வார்த்தைல திட்டுவாங்களாமே
நகல் எடுத்து பக்கத்து வீட்டுக்கு எல்லாம் தருவாங்களாமே
மிரட்டி மன்னிப்பு கேட்க சொல்லுவாங்களாமே
ஆபிஸுக்கு வருவாங்களாமே
இதெல்லாம் தெரியுமா ?
ஆழம் தெரிஞ்சுதான் கால் விட்டு இருக்கீங்களா ?
:(
பார்த்து !
Well written.
Wonderful Joe. Pongittinga
we are always comparing what's in our mind and what's really happening.
Everybody's theory is good to them only. I donno its jealous or hate, but its nothing to care about the society. But women are always targeted by everybody in the society.
நன்றி நாகா. பல மாதங்களுக்கு முன்பே எழுதியிருக்க வேண்டியது, அந்த இடுகையை வாசித்ததும் வந்த எரிச்சலில் சட்டென எழுதி விட்டேன். இன்னும் கோர்வையாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
நன்றி நேசமித்ரன்.
அப்படியெதுவும் நடக்காது நண்பா!
வருவது வரட்டும், பார்க்கலாம்.
நன்றி அனாமிகா.
நன்றி செந்தில்வேல்.
நன்றி நடராஜன்.
I am fed up with these things Joe. இவங்களுக்கெல்லாம் நம்ம மேல அப்படியென்ன ‘காண்டு’னு தெரீல.. ஆனா..! உங்க அக்கறைக்கு நன்றி ஜோ!
குத்துங்க எசமான் குத்துங்க! well written and unbiased comments Joe.
@ நேசமித்ரன் - உங்க கமெண்ட் தூள்! எத்தன் பேர் சரியா புரிஞ்சுக்கிட்டாங்களோ தெரியல :-))))
நன்றி மதன்.
நன்றி சந்துரு.
எங்கையா ஜோ ஆளைக்காணோம்னு சந்துருக்கிட்ட கேட்டிக்கிட்டே இருந்தேன்.
ஒழுக்கம் தனிமனித மனநிலையை சார்ந்தது
நல்லா எழுதியிருக்கீங்க.
ஜீன்ஸ் போட்டவ எல்லாம் பொறுக்கி என்ற அர்த்தத்தில் தான் பல கட்டுரைகள் வருது. எல்லாமே எரிச்சலில் வருபவை. அவர்கள் படும் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும். எத்தனை பெண்கள் தரங்கெட்டு போய் விடுகிறார்கள் என்று காட்டச் சொல்லுங்களேன் பார்ப்போம். நான் BPO வில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன். சக தோழிகள் நெருப்பு மாதிரி இருப்பார்கள். அவர்களின் வழியும் ஆண்கள் சிலருக்கு அறை தான் பதிலாக கிடைத்திருக்கிறது
எல்லா துறைகளிலும் இடங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். கணினி துறையினரை மட்டும் இவ்வாறு சாடுவது மிகவும் தவறு.
நன்றி கென்.
படு பிரபல, பின்நவீனத்துவ கவிஞர்கள்/எழுத்தாளர்கள் கென் & சந்துரு, என்னைப் போன்ற சாதாரண பதிவனையும் தேடியது குறித்து மகிழ்ச்சி. ;-)
நன்றி மழைக்காதலன் (எ) சார்லி.
நன்றி ராசா.
நீங்கள் சொல்வது போல சில தவறுகள் நடக்கத் தான் செய்கின்றன, ஆனால் எழுத்தாளர்களும், சினிமாக்காரர்களும் மென்பொருள் மக்கள் குறித்து கட்டமைக்கும் பிம்பங்கள் அதீதமாக திரிக்கப்பட்டவை.
Excellent lines joe.... Thanks a Ton.
Excellent article from you... Thanks lot.
நன்றி மனோ.
நன்றி காலப்பறவை (எ) Stalin Felix.
மதன், மனோ, ஸ்டாலின் எதற்காக எனக்கு நன்றி சொன்னார்கள் எனப் புரியவில்லை. பத்து வருடங்களுக்கு மேல் மென்பொருள் நிறுவனங்களில் பணி புரிந்தவன்/புரிபவன் என்ற முறையில் அனாவசியமாக நம் மேல் அவதூறு பேசுவோருக்கு எனது எதிர்வினையை பதிவு செய்தேன், அவ்வளவே.
"கம்ப்யூட்டர் பெண் போறாடா,
அவ மோசமானவ வேணாம்டா"
அந்த வரியில இப்படி தான் வரும்..ஜோ
"கம்ப்யூட்டர் பெண் போறாடா
மெளஸா மாற வேணாம்டா"
நன்றி சமரன் (எ) சுந்தர்.
குறிப்பிட்ட சில வரிகளை நீக்கிவிட்டேன்.
பொங்கிட்டிங்க போங்க...
சில பேருக்கு எதையாவது குற்றம் சொல்றதே பொழப்பு...சக மனுசனோட கஷ்டம் புரியாத இவனுங்கள ஏன் பாஸ் நாம மதிக்கணும்?
Jealousy and and ignorance is a very vice combination.Unfortunately a section of the people is thriving on mud slinging here.
I am an HR Consultant.For the past three months I have sent nearly 300 profiles to an IT company in Bangalore.They have selected only one yesterday.
(I know my work very well)
This candidate is not Ishwarya Rai and for that mater not all the others are bad looking.
Got to march forward ignoring these crap.
நன்றி illuminatti & பாலா. பல வருடங்களாக இப்படியே அபத்தமா பேசிட்டு இருக்காங்க. நம்மோட கருத்தை சொல்லனும்னு தோனுச்சு, எழுதிட்டேன்.
ஒவ்வொரு மென்பொருள் வல்லுநர் மனசிலேயும் உள்ள அடி நாதத்தை சமூகத்திற்கு கொண்டமந்தமைக்கு மிக்க நன்றி ஜோ!... Excellent Article..! Keep Writing...!!
முதல் வருகைக்கும், கருத்துக்கும், நன்றி ராஜீவ்.
கும்மியடி,
உங்களது பின்னூட்டம் ஆபாசமாக இருந்ததால் மட்டுறுத்தப்படுகிறது.
Post a Comment