Sunday, 11 April 2010

நீயும், நானும், சில பதிவர்களும்...

நேற்றிரவு ஒன்பது மணியளவில் ஆனந்த் வந்திருந்தான், அவனுடன் பேச விருப்பமில்லை என்ற போதிலும் பூங்காவிற்கு அழைத்துச் சென்றான். கால் மணி நேரம் குடியிருப்பினுள்ளேயே சுற்றி விட்டு, நீச்சல் குளத்தினருகே உட்கார்ந்தோம்.

"யாரிந்த பென், இணைய அரட்டையில் அதிகம் உரையாடுகிறாய் போல?" என்று வினவினான்.

"பாருவின் வாரிசாக அறிவிக்கப்பட்டவர், கதை, கவிதைகள் எல்லாம் நல்லா எழுதுவார்" என்றேன்.

வாரிசு என்றால் சொத்து எதுவும் எழுதி வைத்திருக்கிறாரோ?

தமிழ் எழுத்தாளன் தரித்திரத்தை தான் எழுதி வைப்பான், நீ வேற!

பென் எதுக்கு உன்னைய பெண்ணென்று நினைச்சு எழுதுறார் பஸ்-ல?

ஆணும், பெண்ணும் ஒன்னு  தான் அப்படின்னு நினைக்கிற queer மாதிரி ஆளா இருக்கலாம், யாரு கண்டது? பின் நவீனத்துவ எழுத்தாளர்கள்னாலே இப்படி தான், பித்தேறிய நிலையில ஏதாவது பேசுவாங்க, அதையெல்லாம் பெரிசா எடுத்துக்க கூடாது. (அல்லது கஞ்சா அதிகம் அடிச்சிருப்பாருன்னும் சொல்லலாம்).

ஆனால் அவரை நீ நேரில் சந்திச்சதே கிடையாது? ஆனாலும் பென் அப்படின்னு ஒரு ஆள் இருக்கார்னு நம்புறது வினோதம் இல்லையா?

ரோபோவா இருந்தா இணைய அரட்டையில பத்து வார்த்தை பேசுறதுக்கு அப்புறம் கண்டு புடிச்சிடலாம். ஒரு தடவை தொலைபேசியில் பேசினேன், சுவாரஸ்யமான, நல்ல நகைச்சுவை உணர்வுள்ள ஆளு.

ஒரு வேளை நீ தமிழ் பேசத் தெரிஞ்ச நாயாகவும், அந்தாளு பேசும் தவளையாகவும் கூட இருக்கலாம்.

விலங்குகளைப் அவமானப்படுத்தாதே. அவையெல்லாம் மனிதர்களை விட உயர்ந்தவை-ன்னு யாரோ ஒரு பெரியவர் சொல்லிருக்கார். அங்கே பேல் பூரி விக்கிறான் பாரு, தின்னுட்டு கெளம்பு, நான் போய் தூங்கனும்.

என்கிட்டே ஏது பணம்?

நானே வாங்கி தர்றேன், கெளம்பு காத்து வரட்டும்.

உன்னை விட்டு நான் எங்க போக முடியும், நீயும் நானும் ஒன்று தானே?

தெரியல, அப்படி கூட இருக்கலாம்.

நேத்து ஒரு சக பதிவரை சந்திச்சே போலேருக்கு?

சென்னையில வெயில் அதிகமாயிட்டுருக்கு, கொஞ்சம் மோர் குடிச்சிட்டு பேசிட்டு இருந்தோம். எனக்கென்ன கோவம்னா, நான் profile photo-ல இருக்கிற முகத்தோட போயிட்டேன். அந்தாளு வேற ஏதோ முகத்தோட வந்திட்டாரு. இதெல்லாம் அநியாயம் இல்லையான்னு கேட்டதுக்கு "சொப்பன சுந்தரி கார் மட்டும் தான் என் கிட்ட இருக்கு"-ன்னு ஏதோ உளறுறாரு.

சரி விடு, "வையகத்தே மடவார் தம் கூடியென்" அப்படின்னு திருமூலர் சொல்லிருக்கார்.


12 comments:

நேசமித்ரன் said...

ஆஹா ரைட்டு!

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.... டபுள் ரைட்டூ...

கென்., said...

என்னைப்பற்றி கேவலமாக ( உண்மையை எல்லாம்) சொல்லியிருக்கும் ஜோவை கொலை செய்ய ஆசைப்படுகிறேன்,

ச ம ர ன் said...

எங்க தானைத் தலைவன், தன்மான வீரன் ஜோவுக்கு..யாரோ பில்லி சூனியம் வச்சுட்டாங்க. அத இந்த அரசாங்கம் கண்டுபுடிக்கிற வரைக்கும்..எல்லாப் பதிவர்களும் உண்ணாவிரதம் இருக்கப்போறோம்.

ஏண்ணே !... நல்லாத்தான இருந்தீங்க..என்ன ஆச்சு...முடியல...சத்தியமா சொல்றேன்...என் சித்தறிவுக்கு இந்த பதிவுல இருந்து ஒண்ணுமே எட்டல :)

ஒரு வேளை இதுக்கு பேரு தான் பின்னாடி இருந்து நவீனமாக்குறதோ ??

அஷீதா said...

ஜோ இன்னும் கொஞ்சம் அதிகமா எழுதி இருக்கலாமே. ஓ ஒரு வேல கென் ஜி'யை சந்திச்சதுனால வந்து பாதிப்பா?.

//"சொப்பன சுந்தரி கார் மட்டும் தான் என் கிட்ட இருக்கு"-ன்னு ஏதோ உளறுறாரு.//
ஹி ஹிஹி அப்போ சொப்பன சுந்தரி யாரு கிட்ட இருக்கு ;) - அடுத்த தடவ கென் ஜி'யை பார்க்கும் போது கேளுங்க. :))))))))))))))

கென்., said...

அய்யய்யோ சொப்பன சுந்தரி மேட்டர் நானில்லை அது சந்துருன்னு ஒரு ஆண்ட்ரியா சவுண்ட் சர்வீஸ் ஓனர் இருக்கார் அவர்

மோர் குடிச்சிட்டு பேசின ஆளுங்க சந்துரு மற்றும் ஜோ நானில்லை

Joe said...

நன்றி நேசமித்ரன்.

நன்றி ராகவன் அண்ணா.

நன்றி கென். கொலையை சீக்கிரம் பண்ணுங்க (உளவுத்துறை: இணையத்தில் அலையும் கொலைவெறி பிடித்த சைக்கோக்களை கவனிக்கவும்)

நன்றி சமரன் (எ) சுந்தர். பஸ்-ல நடந்த உரையாடல்களை கவனிச்சிருந்தா புரிஞ்சிருக்கலாம்.
படைப்பாளி என்பவன் பித்தேறிய நிலையில் தனது படைப்புகளை உருவாக்குகிறான், அவை முன், நடு, பின்நவீனத்துவ வகைகளைச் சார்ந்தது என்று முடிவு செய்வது வாசகனின் பொறுப்பு! ;-)

நன்றி அஷீதா. சமரன் ஒண்ணுமே புரியலைங்கிறாரு. நீங்க என்னடான்னா இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்கிறீங்க. இரண்டாம் பாகம் எழுத முயற்சி பண்றேன். ;-)

சொப்பனசுந்தரிய சைக்கோ-ராகவன் தான் வைச்சுரக்கதா ஊரில பேச்சு...

மீள்வருகைக்கும், விளக்கத்துக்கும் நன்றி கென்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

RVC said...

//"வையகத்தே மடவார் தம் கூடியென்"//
;-) நல்லா இருங்க ஜோ..!

RVC said...

// கென்., said...
அய்யய்யோ சொப்பன சுந்தரி மேட்டர் நானில்லை அது சந்துருன்னு ஒரு ஆண்ட்ரியா சவுண்ட் சர்வீஸ் ஓனர் இருக்கார் அவர்

மோர் குடிச்சிட்டு பேசின ஆளுங்க சந்துரு மற்றும் ஜோ நானில்லை//

கென் - இவங்க ரெண்டு பேரையும் நான் பாக்கணும். எங்க இருப்பாங்கன்னு தெரியுமா?

Joe said...

வருகைக்கும், கருத்து(?)க்கும் நன்றி, சந்துரு.

நீங்களும் நல்லா இருங்க ;-)

//கென் - இவங்க ரெண்டு பேரையும் நான் பாக்கணும். எங்க இருப்பாங்கன்னு தெரியுமா?//

அடிக்கிற வெயிலில நம்மள விட பல பேரு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க! ;-)