Monday, 15 June 2009

அபத்தக் களஞ்சியங்கள்!

இத்தாலி உணவான பிஸ்ஸாவை வீட்டுக்கு
வரவழைத்து உண்ணுகிறீர்கள்

அமெரிக்கனைப் போல பர்கர்களை
வாரம் தவறாமல் முழுங்குகிறீர்கள்

சாப்பிட்டவுடன் கோக், பெப்சி குடித்தால்
உடனே செறிக்கும் என்று
அபத்தக் குறிப்பு வேறு சொல்கிறீர்கள்

கரகாட்டம், ஒயிலாட்டம் நிறைந்த நிகழ்ச்சிகளுக்கு
அனுமதி இலவசம் என்றாலும் போக மறுக்கிறீர்கள்

நாதஸ்வரக் கச்சேரி தமிழ் புத்தாண்டில்
ஒலிபரப்பானால் கூட எம்டிவி-க்கு மாற்றி விடுகிறீர்கள்

வெளிநாட்டுக்குப் போனாலும் தமிழ்ச் சங்கம்
வைத்து தாய்மொழியை வளர்க்கிறீர்கள்

பொங்கல் திருவிழாவுக்கு ஒன்று கூடி
"We now invite our chief guest ..." என்று ஆரம்பித்து
"We would like to thank ..." என்று முடிக்கிறீர்கள்

ஆங்கிலேயன் ஆடைகளை உடுத்திக் கொள்கிறீர்கள்
வேட்டி கட்டியவனை கிராமத்தான் என்கிறீர்கள்

கால்சட்டை அணிந்தபடி கோவிலுக்கு சென்று
நம் பெண்கள் தாவணியில் எவ்வளவு அழகு
"ஏன் இப்படி ஆபாச உடை அணிகிறார்கள்?"
என்று புலம்புகிறீர்கள், வெறித்துப் பார்ப்பதை நிறுத்தாமல்.

சேலத்திலிருந்து வந்தவனும், திருச்சியிலிருந்து சென்றவனும்,
சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து
ஆங்கிலத்திலே உரையாடுகிறீர்கள்.

குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கிறீர்கள்
தமிழைத் தவிர்த்து ஹிந்தி படித்தாலும் தவறில்லை என்கிறீர்கள்.

ஏன் அவன் வீட்டிலும் ஆங்கிலத்திலேயே
பேசுவதில்லை என்று அங்கலாய்க்கிறீர்கள்.

பதிவுகளிலும், பத்திரிகைப் பேட்டிகளிலும் சொல்கிறீர்கள்,
நமது கலாச்சாரமே
உலகில் தலைசிறந்தது,
தமிழைக் காக்க எந்நாளும் பாடுபடுவேன் என்று.

21 comments:

பழமைபேசி said...

//ஒண்ணும் சொல்லாம போனா//

சொன்னது சரி; ஆனா தமிலிசுல இன்னும் தொடுக்கலை...

வெ.காளிமுத்து said...

Vaalha valamudan

வேடிக்கை மனிதன் said...

என்னத்த சொல்ல தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் கூட நல்ல 'டமிலில்' தான் பேசுகிறார்கள், தமிழ் தான் வளரமாட்டிங்குது.

Joe said...

நன்றி பழமைபேசி, காளிமுத்து, வேடிக்கை மனிதன்.

கண்ணா || Kanna said...

//ஆங்கிலேயன் ஆடைகளை உடுத்திக் கொள்கிறீர்கள்
வேட்டி கட்டியவனை கிராமத்தான் என்கிறீர்கள்//

இது கலக்கல்..

என்ன பாஸ் ஒரே நாளில் இரண்டு பதிவு போட்டு கலக்குறீங்க...

:)

Suresh said...

சும்மா காலையிலே செருப்பு அடி ;) நச் பதிவு எனக்கும் சேர்த்து தான் மச்சான் ரொம்ப சமுதாய் சிந்தனை உள்ள பதிவு..

உன்னையும் சேர்த்து தான் நீயே அருமையே திட்டிகிட்ட நல்ல நச் பதிவு

ஒவ்வொரு வரியும் அருமை

/
பொங்கல் திருவிழாவுக்கு ஒன்று கூடி
"We now invite our chief guest ..." என்று ஆரம்பித்து
"We would like to thank ..." என்று முடிக்கிறீர்கள்//

Joe said...

வாங்க கண்ணா, சுரேஷ்: கருத்துகளுக்கு நன்றி.

கண்ணா,
பிளாக்கர் ஏதோ பிரச்சினை பண்ணுது, கவிதை (என்று நான் சொல்லிக் கொள்ளும்?!?) பதிவு சனியிரவு எழுதியது, ஆனால் அதுவே ஒரு நாள் கழித்து schedule செய்து கொண்டது.
நரகம் பற்றிய பதிவு நேற்றிரவு இரண்டு மணி நேரம் உட்கார்ந்து எழுதினேன். மீள் வாசிப்பு, வார்த்தைகளை சரி செய்தல், பதிவிடலாமா வேண்டாமா என்பதிலேயே பல நிமிடங்கள் போனது.

சுரேஷ்,
நீங்கள் என்று சொன்னாலும், அதில் சொல்லப்பட்ட அபத்தங்களை நானும் சில நேரம் செய்கிறேன். (பையனை ஆங்கிலப் பள்ளியில் சேர்ப்பது ஒரு எ.கா)

வினோத்கெளதம் said...

என்ன சொன்னாலும் நம் பல நேரங்களில் அப்படி தான் நடந்து கொள்கிறோம் ஜோ..
எனக்கு தெரிந்து பலப்பேர் "எனக்கு தமிழ் சரியாக எழுத படிக்க தெரியாது என்று சொல்வதை பெருமையாக நினைத்து உள்ளர்கள்..
உங்கள் ஊரில்(ஜப்பான்) ஒரு பல்க்கலைகழகம் நடத்திய ஆய்வில் வெளியிட்ட தகவல்..
"எவன் ஒருவன் தன் தாய்மொழியை முழுமையாக எழுத படிக்கச் பேச தெரியாமல் இருக்கிறானோ அவனால் வாழ்வில் எந்த ஒரு விஷயதிலும் முழுமையாக செயல்ப்பட முடியாது"..என்று.
உண்மை தானே..

கலையரசன் said...

//பதிவுகளிலும், பத்திரிகைப் பேட்டிகளிலும் சொல்கிறீர்கள்,
நமது கலாச்சாரமே உலகில் தலைசிறந்தது,
தமிழைக் காக்க எந்நாளும் பாடுபடுவேன் என்று.//

அடங்கொக்கமக்கா... அப்டியே செவுட்ட
"பொச்" ன்னு அப்புன மாதிரி இருந்துச்சி!

கவித மட்டும் எழுதாம நாமலும்
ஏதாவது செய்யனும் மப்பு!

Joe said...

வினோத், கலை : வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

உண்மை தான் வினோத். தாய் மொழியை முழுமையாக கற்காதவன், அந்நிய மொழியை எப்படி கற்றுத் தேர்ச்சி பெற முடியும்?

ஓஹோ, ஜப்பான் இப்போது எனது ஊரா?!? ஜப்பான் எனக்கு இரண்டாம் தாய் வீடு என்று சொல்லலாம்.

கலை: ஆலனுக்கு (என் மகன்) தமிழைக் கற்றுக் கொடுக்க முயற்சிகள் எடுத்து வருகிறேன். ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தமிழை தாழ்வாக நினைப்பது தன்னாலே வந்து விடுகிறது. ("Why don't you talk to him in English at home?" என்று படுத்தும் ஆசிரியர்களும் இதற்கு ஒரு காரணம். வீட்டிலும் தமிழ் பேசவில்லை என்றால் குழந்தைகள் எங்கு தான் போய் தமிழை கற்பார்கள்?)

பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடாவிற்கு புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் என் குழந்தைக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள். வெட்கக் கேடு!

Triumph said...

Hiiiiiiiiiiiiiiiiii,
New to ur blog........ Interesting!!!!!!!!!!!!!!!
Btw, Thnx for the idea abt Ethir pathivu.

Joe said...

Thanks Triumph.

I was only joking that some feminist may write a post against that comment by Suresh Kannan.

உண்மையிலேயே ஒருத்தர் கெளம்பிட்டாறேய்யா, கெளம்பிட்டாரே?

பிரியமுடன்.........வசந்த் said...

தமழை தமில் டமில் ஆக்குகிறவர்கள் இருக்குறவரைக்கும் நாம் தமிழை வாழவைக்க முடியாது

anto said...

அற்புதமான பதிவு.உங்கள் சாட்டை ஒரு சிலரின் மனசாட்சியையாவது நிச்சயம் தட்டி இருக்கும் என நம்புவோம்!

Joe said...

நன்றி வசந்த் & அன்டோ.

மாதவராஜ் said...

விளாரி விட்டீர்கள். சபாஷ்...

Joe said...

வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி மாதவராஜ் அண்ணே!

பட்டாம்பூச்சி said...

என்ன செய்வது?
அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துதான்.
ஆனால் குழந்தைகள் பற்றின கருத்து எனக்கு உடன்பாடல்ல.
பிற்காலத்தில் இருக்கும் போட்டி உலகில் இடம்பிடிக்கவே அதற்க்கு இப்படி தயார்படுத்தலும் தேவையாகவே ஆகிப்போயிருக்கிறது.

Joe said...

நன்றி எவனோ ஒருவன் & பட்டாம்பூச்சி.

குழந்தைகள் வருங்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்கிறீர்களா?

பிற மொழிகளை கற்பதற்கு நான் எதிரானவன் அல்ல. அதே சமயம், முதல் மரியாதையை தாய் மொழிக்கு கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஒரு வேளை நீங்கள் ஜப்பானுக்கு சென்றால் இதனை புரிந்து கொள்வீர்கள். அவர்கள் குழந்தைகள் international school-இல் படித்தால் கூட வீட்டில் தாய் மொழியில் தான் பேசுவார்கள்.

எவனோ ஒருவன் said...

கொஞ்சம் திருத்தினால் சரியாகும் என்று நினைக்கிறேன்.

//தொழிலுக்காக பிற மொழிகளில் புலமை பெறுவது ஒன்றும் தப்பில்லை, அதற்காக தமிழ்(தாய்மொழி) பேசக் கூடத் தெரியாமல் போவது கொடுமையிலும் கொடுமை.//

Joe said...

நன்றி எவனோ ஒருவன்.