- தமிழர்களாகிய நாம் எப்பவும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போடுற அரசியல்வாதிகளுக்கு தான் வோட்டு போடுவோம். (வீட்டுக்குள்ள கறுப்புப் பணத்தை பதுக்கி வைச்சுக்கிறதை எல்லாம் நாம கண்டுக்க மாட்டோம்) இந்த பையன் வெளிநாட்டு உடையான பான்ட், ஷர்ட், கோட் போடுறாரு. இவருக்கு கண்டிப்பா வோட்டு போட கூடாது.
- எந்த வேலையும் பாக்காமே அரசியல்வாதி மகனா பொறந்ததுனாலே சில பேரு கோடிக்கணக்கில சொத்து வைத்து வைச்சிருந்தாலும் நாம கேள்வி கேக்க மாட்டோம். ஆனா ஏழையா பொறந்து, நல்லா படிச்சு, 250 பேருக்கு வேலை கொடுத்தாலும் ஒருத்தன் அதே பழைய வீட்டில இருந்தா அவனை "அற்பப் பய"-ன்னு அவதூறு பேசுவோம். பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கிரவன், அடுத்தவங்க நிலத்தில மாளிகை கட்டுவங்களுக்கு தான் நாம் வோட்டு போடுவோம். இவருக்கு போய் நாம வோட்டு போட முடியுமா?
- எந்த படிப்பறிவும் இல்லாமே, தொழில் பண்ணின அனுபவமும் இல்லாம, அரசியல் சட்ட திட்டங்களையும் படிக்காம, அரசியல்வாதி மகனா பொறந்தாலே போதும், அவருக்கு ராஜாதி ராஜன், வீரத் தமிழன், அப்படின்னு பட்டம் சூட்டி வரவேற்போம். இரண்டு வேளை சாப்பாடு மட்டுமே கிடைச்ச ஒருத்தன், சிம்னி விளக்கில படிச்சு முன்னேறி MBA வரைக்கும் படிச்சு வந்தாலும், அவனுக்கு அரசியல் அனுபவமில்லை, பொது வாழ்க்கையில அவன் என்ன கிழிச்சான்னு காறித் துப்புவோம். இவருக்கு போய் நாம வோட்டு போட முடியுமா?
- தமிழர்கள் எப்பவும் சினிமா நடிகர்களை தான் கடவுளா கும்புடுவோம். அவங்க சினிமாவில ஏழைங்களுக்கு சோறு போடுறது, ஏழைப் பொண்ணுங்களை வில்லன்-கிட்டேருந்து காப்பாத்துறத பாத்து நிஜ வாழ்க்கையிலேயும் நல்லவங்களா இருப்பாங்கன்னு கேனத்தனமா நம்பி "அரசியலுக்கு வந்து எங்களை காப்பாத்து தலைவா"-ன்னு கோஷம் போடுவோம். (அவுங்க தங்கச்சியா நடிச்ச பொண்ணுங்க கூட நீலாங்கரை கடற்கரை மாளிகையில தண்ணிய போட்டு புணர்ந்தாலும், அத நாம கண்டுக்க மாட்டோம்). இந்த பையன் ஜூனியர் ஆர்டிஸ்ட் ரோல் கூட பண்ணலையே, இவருக்கு எப்படி வோட்டு போட முடியும்?
- தமிழர்கள் எப்பவும் மொழிப் பற்று-ங்கிற பேர்ல மொழி வெறியை தூண்டி விடுற அரசியல்வாதிங்களுக்கு தான் வோட்டு போடுவோம். (அவுங்க புள்ளைங்க, பேரப் புள்ளைங்க ஆங்கில பள்ளியில படிச்சிட்டு, தமிழுக்கு பதிலா ஹிந்தி படிச்சாலும் கண்டுக்க மாட்டோம். எங்க அய்யா ராஜதந்திரி, அவரு பேரன் ஹிந்தி படிச்சா தான் அவரு சென்ட்ரல் மினிஸ்டேர் ஆக முடியும்னு சொல்லுவோம்! நம்ம புள்ளைங்க வட நாடு போனா "behenchod, saala madrasi hindi nahi aati"-ன்னு திட்டு வாங்க வைப்போம்). இந்த பையனுக்கு தமிழ் சரியா பேசத் தெரியல. ஹிந்தி, ஆங்கிலம் தான் சரளமா பேசுறாரு, இவருக்கு எப்படி நாம வோட்டு போட முடியும்?
- இவரோட இணையத் தளம் ஆங்கிலத்தில இருக்கு. இது மன்னிக்க முடியாத குற்றம், இவருக்கு எப்படி ஒரு தமிழன் வோட்டு போட முடியும்? (http://chennaicorporation.gov.in முழுக்க முழுக்க ஆங்கிலத்தில இருந்தாலும், எங்க தமிழினத் தலைவர் படமும், திருக்குறளும் மேல போட்டு இருக்கிறதுனால அதை யாரும் குறை சொல்ல கூடாது)
- பிரபல அரசியல் தலைவரோட பையன் வெளிநாட்டில ஒரு வருஷ டிப்ளோமாவை நாலு வருஷம் படிச்சிட்டு வந்தாலும், வெளிநாட்டு பல்கலைக்கழக மேலாண்மை பட்டதாரின்னு புகழ்ந்திட்டு அவருக்கு வோட்டு போடுவோம். இட்லிக் கடை வைச்சிருந்த ஏழைப் பெண்ணுக்கு பொறந்த இவருக்கு நாம எப்படி வோட்டு போட முடியும்?
என் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள், நான் ரசித்த சில விஷயங்கள், அரசியல், தகவல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம், என எல்லாவற்றையும் அலசும் ஒரு தளம்.
Monday, 27 April 2009
சரத்பாபுவுக்கு வோட்டு போடாதீங்க!
Labels:
Chennai,
Indian Parliament Elections,
sarathbabu
| Reactions: |
Subscribe to:
Post Comments (Atom)
60 comments:
Super...
மச்சி டைட்டில் பார்த்து அதிர்ந்து உள்ளே வந்தா மச்சி கலக்கிட்ட ஹா ஹா ;) அந்த கோட்டு கேள்வியும் பேட்டில இருக்கு, சும்மா உன் பதிவு அதிருதுல்ல
really good
உண்மை.
நல்ல பதிவு...
super man
அனானி, தீப்பெட்டி, புகழினி, கிஷோர், சுரேஷ், வண்ணத்துபூச்சியார்
பின்னூட்டங்களுக்கு நன்றி.
Romba supera Irukku..
Well said.
Vanja pukazhchi ani;
nalla aarambham- 2020 election varuvathukkul, Srath Babuvaippol innum 1000 per India muzhuvathum kalathil irupparkal; nam vazhithonralgal nalla arasiyalukku vithu ittullaarkal-ithu nichayamaga jayikkum!!!
Vaazhthukkal !!!
Sudarsan P.K.
when i have seen the title, i really shocked... after reading this, understand its 100% correct.. nice..
this message must reach all voter inthe north chennai., how can we do? please do somthing ....
great...you point out all the idiot mistakes ,the people(we) made during election.we should realize and aware about the correct one.nice post.congrates
It is realy good.
அனானிகள், தீனா, சுதர்சன், ராஜேஷ்வரி, வினோத்:
பின்னூட்டங்களுக்கு நன்றி.
//பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கிரவன், அடுத்தவங்க நிலத்தில மாளிகை கட்டுவங்களுக்கு தான் நாம் வோட்டு போடுவோம்//
நம்ப ஓட்டப்போடுவோம் அந்த நாதாதிகள் ஜெயிச்சி வந்து வேட்டப்போடும்
minimum educational qualification for any job is 10th + 2 but minister postukku no requirement of education...
vegetables vangurappom evvaluvu check pannurom adhu pole vote podurappom check panni podunga
arpudham..yengal vote sarathirkae..
நான் மட்டும் அந்த தொகுதில் இருந்தால் என் முதல் ஓட்டு சரத் பாபுஇக்கு தன்.
அனானிகள், தமிழ், பாலா:
பின்னூட்டங்களுக்கு நன்றி.
//அவருக்கு ராஜாதி ராஜன், வீரத் தமிழன், அப்படின்னு பட்டம் சூட்டி வரவேற்போம்.//
அஞ்சா நெஞ்சனை விடுறீங்க !
A very good post. Chennai South people unanimously come forward and elect him as an MP.
A students should get together and support him.
அருமையான பதிவு....வாழ்த்துக்கள்....
அனானி, ஏன் இந்த கொலை வெறி?
மதுரைக்காரன், கண்ணா பின்னூட்டங்களுக்கு நன்றி.
Super Boss
Thanks Sriram
good,
Great Job!Keep up the good work
அனானிகள், பின்னூட்டங்களுக்கு நன்றி.
super
தமிழ் நெஞ்சம்,
வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி.
அனானியாக வந்த இந்தியன்,
உங்களுக்கு ஹிந்தி தெரியாது என்று நினைக்கிறேன்.
அல்லது நான் சொல்ல வந்த கருத்தை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை.
super
Thanks Amudha
கலக்கிட்டீங்கண்ணே.. இப்படி ஒரு பதிவு போட்டுள்ளீர்களெனில், உங்கள் மனதில் எவ்வளவு ஆதங்கம் இருக்கும் என்பது புரிகிறது. அருமை.
ஐயா.. நரேஸ்குப்தா அவர்களே.. என் ஓட்டை அண்ணன் சரத்பாபு (சுருக்கமா சரத் னு கூட சொல்லமுடியல.) நிற்கிற தொகுதிக்கு மாற்றுங்க ப்ளீஸ்....
நன்றி உழவன்.
திருச்சியில் இருக்கும் எனது வோட்டையும் அப்படியே கேட்டு வாங்கி வர முடியுமா?
//மச்சி டைட்டில் பார்த்து அதிர்ந்து உள்ளே வந்தா மச்சி கலக்கிட்ட ஹா ஹா ;) அந்த கோட்டு கேள்வியும் பேட்டில இருக்கு, சும்மா உன் பதிவு அதிருதுல்ல
//
ரீப்பீட்டு..!! :))
மச்சான் ஜோ நீயும் திருச்சியா சூப்பர், அப்புறம் ஒரு குட் நியுஸ், உன் பிளாக் விகடன் குட் பிளாக்ஸ்ல வந்து இருக்கு வாழ்த்துகள்
title parthu adhirndhu poitengo....nalla soneenga ponga....
கவிதா,
ரிப்பீட்டுக்கு நன்றி.
சுரேஷ்,
நான் திருச்சி-ன்னு ஏற்கனவே சொல்லிருக்கேனே?
விகடன் தளத்தில வந்தது சந்தோஷம்.
அதைப் பத்தி அவுங்களே தனியா ஒரு மின்னஞ்சல் அனுப்பினா நல்லாருக்குமே?
பிரியா,
நன்றி.
சரத்பாபு-வுக்கு வோட்டு போடுங்கன்னு சொல்றதையே வேறு விதமா சொல்லிருக்கேன், அவ்வளவு தான்!
:)
நல்லதொரு பதிவு.. என்னை மிகவும் பாதித்த பதிவு.. மிக நன்றாக இருந்தது. எப்பொழுது நாம் எல்லாம் மாறுவோம்? அந்த கணம் வெகு தூரம் இல்லை என்று நம்புவோம்
சுபாஷ், சரவ்: பின்னூட்டங்களுக்கு நன்றி.
நம் மக்கள் மாறுவார்கள் என்றே நம்புகிறேன். சரத்பாபுவுக்கு வாக்களித்தால் சென்னை அப்படியே சிங்கப்பூர்-ஆக மாறி விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் மற்ற ஏமாற்று பேர்வழிகளை விட, இவர் கண்டிப்பாக ஏதாவது நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/04/blog-post_22.html
excellent artical...idhai paduchalavadhu nammakaelam buthi vanda seri
கவிதா, அனானி,
பின்னூட்டங்களுக்கு நன்றி.
அருமை ஜோ...
Most of the educated people, dint have a choice. we had to choose between a thief and a better thief each time. Now that people like sarath has come in.. there will be a change.
very good
ஸ்ரீநிவாஸ், ஆனந்த், சாரதி: பின்னூட்டங்களுக்கு நன்றி.
Naattukku nalla arasiyalvaadhigal vara aarambichuttaangannu nenacha sandhosama irukku. Makkaloda kadamaiya indha postla azhagha sutti katti irukkum Joe vukku Romba nandri.
vancha pukalichi summa pollanthu katirukenga
தீ, அனானி:
பின்னூட்டங்களுக்கு நன்றி.
மாற்று சிந்தனையோடு வெளி வந்திருக்கிற உங்களுடைய தொகுப்பை பார்த்து ஆச்சரியப் பட்டேன் . மிகவும் வரவேற்கிறேன் .நமது ஜனநாயக நாட்டிற்கு இப்படி பட்ட சரத் பாபுக்களை சுட்டி காட்டுவது காலத்தின் கட்டாயம்.உங்களை போன்ற தெளிந்த சிந்தனை உடையவர்கள் மிக தீர்க்கமாக எழுதி இருக்கிறீர்கள்.உங்களது பணி தொடரட்டும். வாழ்த்துகள் .
நன்றி பிரிட்டோ.
சரத்பாபு வெற்றி பெற்றால் அது ஒரு பெரிய மாற்றத்துக்கு வழி வகுக்கலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
தைரியசாலிப்பா நீ
நன்றி சாய்தாசன்
சாட்டையடி!
நன்றி தீபா, படம் முடிஞ்சு, கதவையெல்லாம் சாத்தின பிறகு வந்து கை தட்டுறீங்க! ;-)
ha ha ha... I remember reading this article via someone's link. AWESOME......
Post a Comment